GCE. A/L TAMIL | GCE. A/L TAMIL UNIT சங்கமருவிய காலம் | GCE A/L TAMIL | GCE A/L ARTS STREAM
Note இதனை 10.00 pm க்கு பின்னர் தரவிறக்கம் செய்யலாம். இதனை லிங்காக (Links) பெற +94754754879 இந்த இலக்திற்கு வாட்சாப் மூலம் தொடர்பு கொள்ளவும்.
NOTE 1
» 3 – 6 ம் நூற்றாண்டுவரையான காலப்பகுதி, அறநூற்காலம்
» சங்கங்கள் அருகிப்போனதால் இதனை சங்கமருவிய காலம் என்கின்றனர்
» அரசன் தனித்து ஆட்சி செய்யாமல் பலரது உதவியை பெற வேண்டியவனாக காணப்பட்டான்
பண்பாட்டு நிலை
ஆரியர் வருகையால் மக்களின் பண்பாட்டில் மாற்றம் ஏற்பட்டது. வர்ண குலதர்மம் தோற்றம் பெற்றது
மக்கள் மத்தியில் ஏற்றத்தாழ்வு ஏற்படல், சமத்துவம் இல்லாது போனது
சமய நிலை
அறநூற்காலமாக காணப்படல்
கடவுள் வழிபாட்டு முறை காணப்படல்
அந்தனர் வருகையால் புதிய கடவுள்கள் அறிமுகமாகினர் - இந்திரன், வருணன், அக்கினி, ஐயனார், சுப்பிரமணியர்
சமன முனிவர்களும் பௌத்த சன்னியாசியும் தமது கொள்கைகளை பரப்பினர்
பள்ளிகளும் விகாரைகளும் போதனை இடங்களாக மாறின
கி.பி 470ல் வட்சரநந்தி எனும் முனிவர் திராவிட சங்கத்தை உருவாக்கி பௌத்த பிரசங்கங்களை மேற்கொண்டார்
கலப்பிரரின் ஆட்சியை தொடர்ந்து மக்களிடையே சமய பகை ஏற்பட்டது.
அறநூல்கள் அக நூல்கள் புற நூல்கள்
1. நாலடியார் 1. ஐந்திணை 50 1. களவழிநாட்பது
2. நாண்மணிக்கடிகை 2. ஐந்திணை 70
3.இன்னாநாற்பது 3. திணைமொழி 50
4.இனியவைநாற்பது 4. திணைமாலை 150
5.திருகடுகம் 5. கைநிலை
6.ஆசாரகோவை 6. கார்நாட்பது
7. பழமொழிநானூறு
8. முதுமொழிக்காஞ்சி
9. சிறுபஞ்சமூலம்
10. ஏலாதி
11. திருக்குறள் - அறம், பொருள், இன்பம
காவியங்கள்; - சிலப்பதிகாரம், மணிமேகலை
சங்கமருவிய காலத்தில் எதிர்பார்க்கப்படும் வினாக்கள்
1. சங்கமருவிய காலம் ஒரு இருண்டகாலமா?
2. சங்கமருவிய காலம் ஏன் ஒரு அறநூற்காலம் என சிறப்பிக்கப்படுகின்றது
3. சங்கமருவிய காலத்தில் அதிக அற நூல்கள் தோற்றம் பெற காரணம் யாது?
4. சங்கமருவிய கால இலக்கியங்களின் பொருள் மரபை விளகக்குக.
5. சங்கமருவிய காலத்தின் இலக்கிய பண்புகள் யாவை?
6. சங்ககாலத்திற்கும் சங்கமருவிய காலத்திற்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை ஆராய்க?
சங்கமருவிய காலத்தில் அதிக அறநூல் தோன்ற காரணம் யாது?
சங்ககால மக்களிடையே காணப்பட்ட அதீத இன்பநுகர்ச்சி, போர் விரக்தி
சமண, பொளத்த மதங்களின் கௌ;கைகளை மக்களிடையே பறவச் செய்தமை
வட இந்திய செல்வாக்கு நிறுவனங்களின் வளர்ச்சியில் தாக்கம் செலுத்தியமை
அரசு, சமூகம், வணிகம் போன்ற கட்டமைப்புக்கள் தோற்றம் பெற்றமையால் அவற்றை ஒழுங்குப்படுத்தவும் கட்டுபடுத்தவும் நெறிமுறைகள் தேவைப்பட்டது
அன்னியர் ஆட்சியில் ஏற்பட்ட சமூக சீர் கேடுகளில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டெடுக்கவேண்டிய தேவை ஏற்பட்டமை
சங்ககால பிறபகுதியில் ஏற்பட்ட போர், சுனாமி அனர்த்தங்களும் மக்கள் வாழ்க்ககையில் விரக்தியை ஏற்படுத்தியது
சமன, பௌத்த மதங்களின் செல்வாக்கு அதிகரித்தமையால் தமது மதத்ததை பாதுகாக்கும் வகையில் கண்டனம் தெரிவிக்கும் வகையில் கருத்துக்களை தெவளியிட்டமை.
சங்கமருவிய காலம் ஒரு அறநெறிக்காலமா?
• சமன பௌத்தம் வருகையால் அறக்கருத்துக்கள் அதிகம் பறவின
• இக்கால பாடு பொருளாக அறம் காணப்பட்டது
• சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காவியம் அறம் உறைத்தன
• சமன பௌத்த மதத்திற்கு எதிராக கண்டனம் தெரிவிக்கும் வகையில் அறகருத்துக்கள் வெளியிடப்படல்
• உளவியல், உலகியல் வாழ்க்கையில் வெருப்படைந்த மக்களை தேற்ற அறக்கருத்து தேவைபட்டது எனவே அதிக அறகருத்து தோற்றம் பெற்றது.
சங்கமருவிய கால இலக்கிய பண்புகள்
1. களப்பிரர் ஆட்சி
2. அறக்கருத்துக்கள் போற்றப்பட்டது
3. வெண்பா யாப்பு கையாளப்பட்டது
4. தொடர்நிலை செய்யுள்கள் காணப்பட்டமை
5. பக்தியின் தோற்றுவாயாக அமைதல்
6. காவியங்கள் தோற்றம் பெற்றமை
7. உரைநடை வளர்ச்சி ஆரம்பமானது
8. இலக்கணமும் நாடக அமைப்பும் காணப்பட்டது
9. அகத்தினை, புறத்தணை மரபு காணப்படல்
10. எத்தகைய வரையரையும் இல்லை
11. பதிக அமைப்பு, அந்தாதி வடிவம் தோற்றம்
சங்ககாலத்திற்கும் சங்கமருவிய காலத்திற்கும் உள்ள ஒற்றுமைகள்
அறத்தை கொடுத்து உதவியது : யாதூம் ஊரே யாவரும் கேளீர்
எல்லோரும் எமது உறவினர்
நன்மையும் தீமையும் நாமே உருவாக்கிக் கொளவது
அவர் அவர் செய்த நன்மை தீமைக்கு ஏற்ப வாழ்க்கை
சங்கமருவிய காலத்தில் - நாலடியார், பழமொழி 400, திருக்குறள்
புறத்தை கொடுத்து உதவியது – களவழிநாட்பது (சோழ செங்க நானுக்கும், சேரமான் கடைக்கால்
திரும்பொறைக்கும் இடையே நடந்த போர் பற்றி குறிப்பிடுகின்றது.
அணிபயன்பாடு
திணையைக் கொடுத்துதவியது – திணைமொழி 50, 150 ஐந்திணை 50, 70
செய்யுள் முறையை கொடுத்து உதவியது
பாக்களை கொடுத்துதவியது –
அகவல், வஞ்சி, கலிப்பா சிலப்பதிகாரத்தில் பயன்படுத்தப்பட்டமை
கழிப்பா திருவிரட்டைமணிமாலை பாட காரணமாய் அமைந்தது
கார 40,களவளி 40, ஐந்திணை 50- வெண்பா யாப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது
நாடகப்பாங்கை கொடுத்துதவியது – தலைவன் தலைவி, தோழி கூற்று சிலப்பதிகாரத்தில் கண்ணகிக்கும் கோவலனுக்குமிடையே நடந்த உரையாடல் “என் கணவன் கள்வனா”?
ஆற்றுபடுத்தல் இலக்கிய முறையை கொடுத்தது
பதிக வடிவத்தை கொடுத்துதவியது – ஐங்குருநூறு தொண்டிப்பதியில் உள்ள 10 செய்யுள், பதிற்றுப்பத்து நான்காம் பகுதியில் உள்ள 10 பாட்டு அந்தாதி வடிவ தோற்றத்திற்கு காரணம்.
சங்ககாலத்திற்கும் சங்கமருவிய காலத்திற்கும் உள்ள வேற்றுமைகள்
» சங்ககாலத்தில் அகம், புறம், ஆற்றுபடுத்தல் என்பன பாடுபொருளாக அமைய சங்க மருவிய காலத்தில் அறமே பிரதான பாடு பொருளாக அமைந்தது
» சங்க மருவிய காலம் சமயம் சார் விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றது
» சங்ககாலத்தில் தனித்துவமான தமிழ் முறையிலான வாழ்க்கை முறை சித்தரிக்கப்பட்டது சங்கமருவிய காலத்தில் வட இந்திய செல்வாக்கிற்கு உட்பட்டது.
» சமன பொளத்த செய்திகள் பரவலாயின.
» சங்ககாலத்தில் தனி நிலை செய்யுள்களே அதிகமாக தோற்றம் பெற்றது. சங்கமருவிய காலத்தில் தொடர்நிலை செய்யுள்கள் தோற்றம் பெறல் - திருக்குறள்
» தனிப்பாடல்கள், ஆற்றுபடை இலக்கியங்களாக சங்ககாலத்தில் இருக்க, அந்தாதி, இரட்டைமணிமாலை, காவியம் என பல இலக்கிய வடிவங்கள் மாற்றம் கண்டது
» தனி தமிழ் நடை காணப்பட்டது. சங்க மருவிய காலத்தில் வடமொழியும் தமிழ் மெழியும் கலந்த மனிபிரவாழ நடை அறிமுகம்.
NOTE 2
சங்கம் மருவிய காலம்
கி்.பி. 300 - 600 காலப்பகுதி சங்கம் மருவிய காலம் எனப்படுகிறது. கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் தமிழ் நாடு அயலார் ஆட்சிக்குட்பட்டது. சோழ நாட்டையும் பாண்டி நாட்டையும் களப்பிரர் கைப்பற்றி ஆட்சி செய்தனர். நடு நாடும் தொண்டை நாடும் பல்லவர் ஆட்சிக்குட்பட்டன. களப்பிரர் பாளி மொழியையும், பல்லவர் பிராகிருத மொழியையும் ஆதரித்தனர். இவர்களின் ஆட்சிக் காலத்தில் தமிழ் மொழி, தமிழ்க் கலைகள், தமிழ்ப் பண்பாடு என்பன வளர்ச்சி குன்றின. தமிழ் மொழியில் பெருமளவிலும் சிறப்பான முறையிலும் நூல்கள் தோன்றவில்லை. எனவே, தமிழ் இலக்கிய வரலாற்றிலே இக்காலப் பகுதியினை சங்கம் மருவிய காலம் அல்லது 'இருண்ட காலம்' எனக் குறிப்பிடுவர்.
இருண்ட இக்காலப் பகுதியிலும் சில தமிழ் நூல்கள் தோன்றின. பதினெண்கீழக்கணக்கு நூல்கள், சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியன இக்காலகட்டத்தில் எழுந்தனவெனக் கூறுவர். இவற்றுள் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களைச் சங்க கால நூல்கள் என்று சிலர் குறிப்பிடுவர். இந்நூல்கள் பொருளாலும் நடையாலும் சங்க இலக்கியங்களினின்றும் வேறுபட்டுள்ளன. "அந்நூல்கள் எல்லாம் எவ்வாண்டில் எழுதப்பெற்றன என்பதை அறிந்து கோடற்கு ஆதாரங்கள் கிட்டவில்லை" என்று சதாசிவ பண்டாரத்தார் கூறுவர்.
இந்த இருண்ட காலப் பகுதியிலேயே காரைக்காலம்மையாரும் திருமூலரும் வாழ்ந்தனர். காரைகாலம்மையார் அற்புதத் திருவந்தாதி, திருவிரட்டை மணிமாலை, திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் இரண்டு என்பவற்றை இயற்றினார். இபத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் நமக்கு கிடைத்துள்ள சங்கநூல்கள். ஆகும். அவற்றில் தற்போது கிடைத்துள்ள சங்கப்பாடல்கள் 2381. அவற்றுள் 2279 பாடல்களுக்கு மட்டுமே அவற்றைப் பாடிய புலவர்களின் பெயர்கள் தெரியவருகின்றன. ஏனைய பாடல்களைப் பாடிய புலவர்களின் பெயர்கள் தெரியவில்லை.
சங்க காலப் புலவர்கள் 473 பேர். சங்கம் மருவிய காலப் புலவர்கள் 18 பேர். பதினெண் கீழ்க்கணக்கு நூல்களைப் பாடிய புலவர்களைச் சங்கம் மருவிய காலப் புலவர்கள் என்று குறிப்பிடுகிறோம். கபிலர் என்னும் புலவர் சங்க காலப் புலவர் பட்டியலிலும், சங்கம் மருவிய காலப் புலவர் பட்டியலிலும் உள்ளார். இவர்கள் வெவ்வேறு புலவர்கள் என்பதைத் தெளிவுபடுத்திக்கொள்வதற்காகவே இந்தப் பட்டியல் இங்குத் தரப்படுகிறது. மேதாவியார் என்னும் புலவரையும் இங்கு எண்ணிப் பார்க்க வேண்டும்.
புலவர் பெயர்கள் அகரவரிசைப் படுத்தப்பட்டு அவரால் இயற்றப்பட்ட நூலின் பெயருடன் இங்குத் தரப்பட்டுள்ளன
கண்ணங்கூத்தனார்,மதுரை – கார் நாற்பது
கண்ணன் சேந்தனார் – திணைமொழி ஐம்பது
கணிமேதாவியார் - திணைமாலை நூற்றைம்பது
கணிமேதையார் – ஏலாதி
கபிலர் – இன்னா நாற்பது
காரியாசான் – சிறுபஞ்சமூலம்
கூடலூர் கிழார் – முதுமொழிக்காஞ்சி
சமணமுனிவர்கள் – நாலடியார்
திருவள்ளுவர் – திருக்குற
நல்லாதனார் – திரிகடுகம்
புல்லங்காடனார், மாறோக்கத்து முள்ளிநாட்டுக் காவிதியார் மகனார் - கைந்நிலை
பூதஞ்சேந்தனார் – இனியவை நாற்பது
பொய்கையார்– களவழி நாற்பது
மாறன் பொறையனார் – ஐந்திணை ஐம்பது
முள்ளியார், பெருவாயில் – ஆசாரக்கோவை
முன்றுறையரையனார் – பழமொழி
மூவாதியார் - ஐந்திணை எழுபது
விளம்பிநாகனார் – நான்மணிக்கடிகை
சங்க மருவிய கால இலக்கியங்களின் பண்புகள்
சங்கமருவிய காலத்தில் தமிழ்நாட்டிலே களப்பிரரது ஆட்சி நிலைபெற்றிருந்த்து. இக் காலத்திலேயே சமண, பௌத்த துறவோர்கள் அதிகளவிலே தமிழ்நாட்டிற்குள் புகுந்துகொண்டார்கள். மக்களின் வாழ்வு இருள் சூழ்ந்ததாகக் காணப்பட்டது. இதன் அடிப்படையில் பல இலக்கியங்கள் தோன்றத் தொடங்கின. சங்கமருவிய காலத்தில் தோன்றிய தமிழ்இலக்கியங்களின் பண்பியல்புகளை இங்கே அவதானிக்கலாம்.
சங்கமருவிய காலத்தில் தோன்றிய தமிழ் இலக்கியங்களின் பிரதானமானதொரு பண்பு அறத்தைப் பொருளாகக் கொண்டிருப்பதாகும். அதாவது சங்கமருவிய கால முற்பகுதியிலே சமண, பௌத்த துறவோர்கள் பெரு வாரியாக வந்து அறப்போதனைகள் மூலம் சமண, பௌத்த மதங்களைப் பரப்பினார்கள். இதனாலே சங்கமருவிய காலத்தில் திருக்குறள், நாலடியார் போன்ற அறம் கூறுகின்ற இலக்கியங்கள் அதிகளவில் தோன்றின. இவ்வாறாக சங்கமருவிய கால இலக்கியங்கள் அறத்தைப் பொருளாகக் கொண்டிருப்பதும் இக்கால இலக்கியங்களின் பண்பாகும்.
சங்கமருவிய கால இலக்கியங்கள் பக்தியைப் பொருளாகக் கொண்டிருப்பதும் இக்கால இலக்கியங்களின் பண்பாக அமைகின்றது. அதாவது சங்கமருவிய கால முற்பகுதியிலே சமண, பௌத்த துறவோர்கள் அறப் போதனைகள் மூலம் தமது சமயத்தை வளர்த்தார்கள். இதனால் சைவ, வைணவ வளர்ச்சி குன்றியது. சைவத்தை வளர்க்க காரைக்கால் அம்மையாரும், வைணவத்தை வளர்க்க பொய்கையாழ்வார், புதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகியோரும் முயன்றார்கள். காரைக்காலம்மையார் அற்புதத் திருவந்தாதி, திருவிரட்டை மணிமாலை, திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் ஆகியவற்றையும் முதலாழ்வார் மூவர் முதலாம், இரண்டாம், மூன்றாம் திருவந்தாதிகளையும் பாடியுள்ளார்கள். இவ்வாறு பக்தியைப் பொருளாகக் கொண்ட இலக்கியங்கள் தோன்றியிருக்கின்றமையும் சங்கமருவிய கால இலக்கியங்களின் பண்பாகும்.
சங்கமருவிய கால இலக்கியங்களின் மற்றுமொரு பண்பு அகம், புறத்தைப் பொருளாகக் கொண்டிருப்பதாகும். சங்ககால இலக்கியங்களின் தாக்கத்தினால் சங்க கால இலக்கியங்களின் பொருள் மரபுகளாகிய அகமும், புறமும் சங்கமருவியகால இலக்கியங்களிலும் இடம்பெற்றுள்ளன. ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது முதலான இலக்கியங்கள் அகத்திணை பற்றிக் கூறுவனவாகவும், களவழிநாற்பது புறத்திணை பற்றிக் கூறுவதாகவும் அமைந்திருக்கின்றது.
சங்கமருவிய கால இலக்கியங்களின் மற்றுமொரு பண்பு வெண்பா, கலிப்பா யாப்புக்களைக் கொண்டிருப்பதாகும். அதாவது சங்கமருவிய கால இலக்கியங்கள் வெண்பா, கலிப்பா யாப்புக்களிலேயே அமைந்து காணப்பட்டன. இருப்பினும் வெண்பா யாப்பே அதிகளவில் கையாளப்பட்டிருக்கின்றது. பேசுவோனை முன்னிலைப்படுத்தி வினாவிற்கு ஏற்ற விடை இருக்கும் பாங்கில் போதனைக்குகந்த யாப்பாக வெண்பா கொள்ளப்படுகின்றது. இது செப்பலோசையுடையதாகக் காணப்படுகின்றது. ஆதலாலேயே அறக் கருத்துக்களை வெண்பா யாப்பில் கூறினர். சங்கமருவிய கால இலக்கியங்கள் இவ்வாறு வெண்பா யாப்பினாலும், கலிப்பா யாப்பினாலும் அமைந்திருப்பது இக்கால இலக்கியங்களின் பண்பாகும்.
சங்கமருவியகால இலக்கியங்களின் மற்றுமொரு பண்பு அகவல், வஞ்சி யாப்புக்களைக் கொண்டிருப்பதாகும். அதாவது சங்ககால இலக்கியங்களின் தாக்கத்தினால் சங்கமருவிய கால இலக்கியங்களிலும் சங்ககால யாப்புக்களாகிய அகவல், வஞ்சி கையாளப்பட்டுள்ளமையைக் காணமுடிகின்றது. சங்கமருவிய காலத்தில் தோன்றிய சிலப்பதிகாரத்திலே இந்த அகவல், வஞ்சி கையாளப்பட்டுள்ளமையைக் காணலாம். இவ்வாறாக சங்கமருவிய கால இலக்கியங்கள் அகவல், வஞ்சி யாப்புக்களைக் கொண்டிருப்பதும் சங்கமருவிய கால இலக்கியங்களின் ஒரு பண்பாகும்.
சங்கமருவிய கால மற்றுமொரு பண்பு தொடர்நிலைச் செய்யுட்களாகக் காணப்படுவதாகும். அதாவது சங்க காலத்திலே ஒரு தனி விடயத்தை ஒரு பாடலில் பாடுகின்ற தனி நிலைச் செய்யுட்கள் சிறப்புப் பெற்றிருந்தன. ஆனால் சங்கமருவிய காலத்திலோ ஐந்து அகத்திணையும் தொடர்ந்து பாடுகின்ற தொடர்நிலைச் செய்யுட்கள் சிறப்புப் பெற்றுக் காணப்பட்டன. ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது முதலான இலக்கியங்கள் தொடர்நிலைச் செய்யுட்களாகவே காணப்பட்டன. இவ்வாறு தொடர்நிலைச் செய்யுட்களாகக் காணப்படுவதும் சங்கமருவிய கால இலக்கியங்களின் ஒரு பண்பாகும்.
இக் கால இலக்கியங்களின் மற்றுமொரு பண்பு காவிய வடிவம் சார்பானதாகக் பொருட்களை வெளிப்படுத்தி தன்னிகரற்ற தலைவனின் வாழ்க்கை வரலாற்றை இயற்கை வர்ணனைகளின் பின்னணியில் கூறுவது காவியமாகும். அத்தகைய காவியம் சங்கமருவிய காலத்திலேயே முதன்முதலாக தமிழில் தோன்றியது. இவ்வாறு சிலப்பதிகாரம் முதலில் தோன்ற அதனைத் தொடர்ந்து மணிமேகலை தோற்றம் பெற்றது.
சங்கமருவிய கால இலக்கியங்கள் உரைநடைப் பண்புகளையும் கொண்டிருந்தன. தமிழின் உரைநடையின் தோற்றக்காலமாக சங்கமருவிய காலத்தைக் கொள்வார்கள். சங்கமருவிய காலத்தில் தோன்றிய உரைநடைப் பண்பினை சிலப்பதிகாரத்தில் காணலாம். சிலப்பதிகாரத்தில் உரையும், பாட்டும் மாறி மாறி வருவதனால் இதனை “உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்“ எனவும் அழைப்பர். சிலப்பதிகாரத்தில் வருகின்ற கானல்வரி, குன்றக்குரவை, ஆய்ச்சியர் குரவை ஆகிய பகுதிகளில் இவ்வுரைநடையின் சாயலைக் காணலாம். ஆய்ச்சியர் குரவையில் வருகின்ற,
“கயலெழுதிய இமயநெற்றியின்
அயலெழுதிய புலியும் வில்லும்“ என்கின்ற அடிகளை இங்கு எடுத்துக்காட்டலாம்.
தமிழில் தொடக்க கால உரைநடை இதுவாதலால் எதுகை, மோனை என்கின்ற செய்யுட்குரிய பண்புகளைக் காணமுடிகின்றது.
சங்கமருவிய கால இலக்கியங்களின் மற்றுமொரு பண்பு வடமொழிக் கலப்புமிக்கவையாகக் காணப்படுவதாகும். அதாவது சங்கமருவிய காலப் பகுதியிலே வடநாட்டிலிருந்து ஆரியர்கள் பெருவாரியாகத் தமிழ்நாட்டிற்குள் புகுந்துகொண்டார்கள். ஆரியர்களின் வரவோடு அவர்களுடைய வணக்க வழிபாடுகள் மட்டுமன்றி அவர்களின் மொழியாகிய வடமொழியும் தமிழோடு கலந்தது. வட சொற்களும், வட சொற்றொடர்களும் தமிழோடு கலந்தன. திரிகடுகம், சிறுபஞ்ச மூலம், ஏலாதி, ஆசாரக்கோவை முதலான நால்களின் பெயர்களும் கூட வடமொழியிலேயே அமைந்திருந்தன. இவ்வாறாக வடமொழிக் கலப்புடையதாகக் காணப்படுவதும் சங்கமருவிய கால இலக்கியங்களின் பண்பாகும்.
சங்கமருவியகால இலக்கியங்களின் மற்றுமொரு பண்பு சிறந்த அணிகளை கொண்டிருப்பதாகும் அதாவது சஙடகமருவியகால இலக்கியங்களிலே உவமை, உருவக அணிகள் மட்டுமன்றி சிறப்பாக தற்குறிப்பேற்ற அணிகளும் கையாளப்பட்டிருப்பதனை அவதானிக்கலாம். அதாவது சங்கமருவியகாலத்தில் தோன்றிய சிலப்பதிகாரத்திலே உவமை, உருவகம் தற்குறிப்பேற்றம் கையாளப்பட்டுள்ள சந்தர்ப்பத்தை அவதானிக்கலாம் இவ்வாறாக சிறந்த அணிகளை கையாளுவதும் சங்கமருவியகால இலக்கியங்களின் பண்பாகும்.
CLICK THIS LINK TO DOWNLOAD
*லிங்க் இல் நுழைந்த பிறகு இதனை கட்டாயம் செய்யவும்..*
1.(Deny)
2.Skip This Ad Ah kudungga...
3.Vera website la poona back ah kudungga
https://gestyy.com/e0WOap