வீணையடி நீ எனக்கு Episode 1 to Episode 4 எனும் தொடர்கதை

வீணையடி நீ எனக்கு Episode 1

வீணையடி நீ எனக்கு Episode 2

வீணையடி நீ எனக்கு Episode 3

வீணையடி நீ எனக்கு Episode 4

வீணையடி நீ எனக்கு Episode 5

வீணையடி நீ எனக்கு Episode 6

வீணையடி நீ எனக்கு Episode 7

வீணையடி நீ எனக்கு Episode 8

வீணையடி நீ எனக்கு Episode 9

வீணையடி நீ எனக்கு Episode 10

வீணையடி நீ எனக்கு Episode 11

வீணையடி நீ எனக்கு Episode 12



Episode 1

புத்தம் புது
காலை பொன்னிற
வேளை என் வாழ்விலே
தினந்தோறும் தோன்றும்
சுகராகம் கேட்கும்
எந்நாளும் ஆனந்தம்.....

இளையராஜா பாடலை radioல் கேட்டுக்கொண்டு.. போர்வையை இழுத்து போர்த்தி கொண்டு முணுமுணுத்து கொண்டு இருந்தான் கதிர்.. ஆமாங்க நம்ம hero தான்...

விக்னேஷ் :"Time 11ஆகுது.. இப்ப தான் உனக்கு புத்தம் புது காலை.. பொன்னிற வேலை யா.. எழுச்சிடு டா.. வெளிய வெளியில் பல்ல காட்டுது... " என்று கத்தி கொண்டே room ல அலைந்து கொண்டு இருந்தான்..



மனோ :"ஏன் டா கத்துற.. இந்த பறந்து விரிந்த உலகம் நமக்கு என்ன சொல்லுது தெரியுமா... " என்றான் bolcony லில் நின்ற படி...

விக்னேஷ் :"என்னங்க sir சொல்லுது.. இந்த பத்தாவது மாடில இருந்து உன்ன தள்ளிவிட சொல்லுதா.. "

மனோ :"life enjoy பன்னுறதுக்கு னு சொல்லுது மச்சி.. "

விக்னேஷ் :"அட போட.. ஒரு சிகெரட் வாங்க கூட வழி இல்ல எனக்கு.. இதுல என்னத்த enjoy பண்ணுறது... "

மனோ :"அதான் உனக்கு நாங்க இருக்கோம் ல... அப்புறம் என்ன... "

விக்னேஷ் :"நீங்க நல்லா வேலைல இருக்கீங்க.. நான் தான்.. "

மனோ :"ஆமா இன்னைக்கு interview சொன்னியே என்ன ஆச்சு.. "

விக்னேஷ் :"போகணும் டா.. மதியம் தான் வர சொல்லி இருகாங்க.. "

மனோ :"அப்போ போய் ரெடி ஆகு.. "

விக்னேஷ் :"இதுவும் எப்புடியும் வழக்கம் போல ஊத்திக்க போகுது.. அப்புறம் எதுக்கு டா.. "

கதிர் சோம்பலை முறித்து படுக்கையில் இருந்து எழுந்தான்...

மனோ :"hey எரும.. இன்னைக்கு நீ வேளைக்கு போகலையா... "

கதிர் :"second shift டா... "

விக்னேஷ் :"இருந்தா இவனை மாதிரி இருக்கனும்.. பாரு எத பத்தியும் கவலை இல்ல.. "

மனோ :"உனக்கு என்ன டா கவலை.. "

விக்னேஷ் :"படிச்சு முடிச்சாச்சு.. வேலைக்கு போகணும்.. சம்பாதிக்கணும்.. அம்மா அப்பா வா நல்லா பார்த்துக்கணும்.. தங்கச்சி க்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்.. "

கதிர் :"போதும்.. போதும்.. List பெருசா போகுது... "

விக்னேஷ் :"உனக்கு என்ன பா.. உன் சம்பளத்தை நம்பி வீட்ல இல்ல.. So நீ jolly யா இருக்க.. எந்த கவலையும் இல்லாம... "

கதிர் எழுந்து balcony க்கு வந்தான் :"டேய் மச்சான் எல்லாத்துக்கும் நம்ம மனசு தான் டா காரணம்.. இங்க இருந்து கிழ பார்த்தா அந்த car எவ்வளவு சின்னதா தெரியுது.. கிட்ட போன பெருசா தெரியும்.. அதே மாதிரி தான் prob ஹ தூரமா வச்சே பார்க்கணும்.. அப்பா தான் அது சின்னதா தெரியும்... "

மனோ :"எப்புடி மச்சான்.. நீ பொண்ணுங்க கிட்ட இருந்து தள்ளியே இருக்கியே அப்புடியா.. "

விக்னேஷ் குடித்து கொண்டு இருந்த coffee யை துப்பிவிட்டு சிரித்தான்..

கதிர் :"கொழுப்பு டா உங்களுக்கு.. வேற ஒன்னும் இல்ல... "

விக்னேஷ் :"ohh.. அப்போ இல்லையா.. மச்சான் இவன் என்ன பண்ணான் தெரியுமா... நேத்து " என்று மனோவிடம் சொல்ல

கதிர் :"வேணாம் டா.. சும்மா இரு.. " என்று அவனின் வாயை மூடினான்

மனோ :"அப்போ ஏதோ இருக்கு.. சொல்லு மச்சி... " என்று கதிரை பிடித்து இழுத்தான்

கதிர் :"டேய் விடு டா என்ன... "

விக்னேஷ் :"நேத்து ஒரு custmer call phone டா.. அதுல ஒரு பொண்ணு.. "

மனோ :"சரி... "

விக்னேஷ் :"sir உங்களுக்கு loan offer இருக்கு.. அந்த scheme பத்தி சொல்லட்டுமா னு சொல்லுச்சு.. "

மனோ :"ok.. "

விக்னேஷ் :"இவன் எனக்கு இப்ப idea இல்ல thanks அப்புடின்னு சொன்னான்.. "

மனோ :"ok... "

கதிர் :"என்ன அவன் கதையா சொல்லிட்டு இருக்கான்... நீ உம் கொட்டிக்கிட்டு கேட்டுகிட்டு இருக்க.. "

மனோ :"நீ சும்மா இரு.. நீ சொல்ல டா.. " என்றான் விக்னேஷ்ஐ பார்த்து

விக்னேஷ் :"அதுக்கு அந்த பொண்ணு ok sir.. உங்களுக்கு future ல தேவைப்பட்டா சொல்லுங்க.. என் number உங்களுக்கு தரேன்.. உங்க friends க்கு loan வேணும்னாலும் refer பண்ணுங்க.. னு சொன்னா... "

மனோ :"வழக்கமா சொல்லுறது தானே.. "

விக்னேஷ் :"அந்த பொண்ணு வழக்கமா சொல்லுற மாதிரி தான் சொல்லுச்சு.. ஆனா நம்ம sir சொன்னது இருக்கே... "

கதிர் :"பின்ன என்ன டா.. என்ன தைரியம் இருக்கும்.. யாரு என்ன னு தெரியாத எனக்கு number தருவாளாம்.. அத என் friends கிட்ட கூட share பண்ணலாமா.. அப்புறம் எதாவது பிரச்சனை ன.. இந்த பசங்க தான் mis behave பண்ணுறாங்க னு நம்ம மேலயே கதையே திருப்பிடுவாங்க.. Idiots.... "

விக்னேஷ் :"இதே மாதிரி கண்ணா பின்னான்னு திட்டிட்டான்... அந்த பொண்ணுக்கு ஏன் டா phone பண்ணோம் னு ஆகி இருக்கோம்.. "

மனோ :"ஏன் டா இப்படி இருக்க... இதுவே நானா இருந்தா.. இந்நேரம் fb ல friend ஆகி instagram ல follow பண்ணி.. whatsapp ல கடல போட்டு இருப்பேன்.. "

கதிர் ;"பல்லு உடைஞ்ச தெரியும்... "

விக்னேஷ் :"இந்த வயசுல கடல போடாம.. வேற எப்ப டா.. "

மனோ :"இவனும் யாரையும் site அடிக்க மாட்டுறான்.. நம்மையும் அடிக்க விட மாட்டுறான்.. டார்ச்சர் பண்ணுறான்.."

கதிர் :"இரு டா phone போட்டு மாமா கிட்ட சொல்லுறேன்.. "

மனோ :"அவர் ஒருத்தர்.. இவன் தான் வயசுல பெரியவனாம்.. இவனுக்கு கல்யாணம் ஆனா அப்புறம் தான் எனக்கு பண்ணுவாராம்.. மூணு மாசம் தான் வித்யாசம்.. எனக்கும் இவனுக்கும்.. "

விக்னேஷ் :"விடு டா புலம்பாதே... "

மனோ :"பின்ன என்ன.. இவனை பாரு இப்படி பண்ணா எவளாவது இவனை கடிப்பாளா.. "

கதிர் :"விடு மச்சான்.. கடைசி வரைக்கும் நாம இப்படியே சந்தோசமா இருப்போம்.. "

இருவரும் கோரஸாக :"மண்ணாங்கட்டி.. "

கதிர் :"உங்களுக்கு வேற வேலையே இல்லையா.. எப்ப பாரு பொண்ணுகளை பத்தி பேசிகிட்டு... "

மனோ :"இந்த வயசுல வேற என்ன பேச சொல்லுற... "

கதிர் அவனை முறைத்து விட்டு.. விக்னேஷிடம் :"நான் குளிச்சிட்டு வரேன் ரெடி யா இரு.. உன்ன drop பன்னிட்டு நான் அப்புடியே வேளைக்கு கிளம்புறேன்... " என்று குளிக்க சென்றான்

விக்னேஷ் :"அவனை பற்றி தான் தெரியும் ல.. ஏன் டா வீனா அவனை கடுப்பேத்துற.. "

மனோ :"போ டா டேய்.. " என்று சென்றான்

விக்னேஷ் interview க்கு ரெடி ஆகி கொண்டு இருந்தான்

Ok friends.. இவங்க ரெடி ஆகுறதுக்குள்ள இவங்கள பற்றி ஒரு quick intro...

கதிர்... மனோ இருவரும் relations.. கதிரோட மாமா பையன் தான் மனோ.. ரெண்டு பேரும் சின்ன வயசுல இருந்தே close friends..

விக்னேஷ் இவங்க school friends.. School collage எல்லாமே மூணு பேரும் ஒன்னா தான் படிச்சாங்க.. கதிர்.. மனோ.. சண்டைய சமாதானம் பன்னுறதே விக்னேஷ் க்கு full time job... இவங்க சொந்த ஊரு திருச்சி...

கதிர்க்கு எல்லாமே மனோ அப்பா செல்வம் தான்..

கதிர் க்கு அவங்க மாமா and friends இது தான் உலகம்.. அவன் உலகத்துல வேற யாருக்கும் இடம் இல்ல

மனோ பத்தி சொல்லணும் ன.. அவன் ஒரு chocolate boy.. jolly யா ஊரை சுத்திகிட்டு.. எத பத்தியும் பெருசா கவலை படமா life ஹ enjoy பண்ணிக்கிட்டு இருக்கான்... இவனை பற்றி போக போக பார்க்கலாம்...

மனோக்கு கூட பொறந்தவங்க மூணு brothers... ஆனா கதிர் தான் எல்லாமே...

விக்னேஷ் கொஞ்சம் புலம்பல் case தான் ஆனா நல்லா பையன்.. சாமி நம்பிக்கை அதிகம் இருக்கு... over sentiment party....

கதிர் chennai ல ஒரு flat வாங்கி அங்க தான் இருக்கான்.. அங்க தான் மனோ and விக்னேஷ் தாங்கி இருகாங்க...

*****

கதிர் ரெடி ஆகி வந்தான் :"கிளம்பலாமா..."

விக்னேஷ் :"ஆஹ டா.. நான் ரெடி... "

மனோ :"ngt க்கு சாப்புட வந்துடுவீங்களா... "

விக்னேஷ் :"டேய் நீ வேளைக்கு போகலையா... "

கதிர் :"அதானே... "

மனோ :"இல்ல மச்சான் இன்னைக்கு போற மூடு இல்ல.. "

விக்னேஷ் :'இவன் முழியே சரி இல்லையே... "

கதிர் :'இங்க பாரு நான் second shift தான்.. வந்துடுவேன்.. friend அது இது னு எவளையாவது கூட்டிட்டு வந்த.. கொலை பண்ணிடுவேன்... "

மனோ :"மச்சான் என்ன டா.. என்ன பார்த்து இப்படி சொல்லிட.. என்ன நம்ப மாட்டியா.. "

கதிர் :"சாத்தியமா மாட்டேன் டா... " என bike சாவியை எடுத்துக்கொண்டு சென்றான்

விக்னேஷ் :"உனக்கு தேவையா... " என்று அவன் பின்னால் சென்றான்...

கதிர் விக்னேஷ் ஐ interview க்கு விட்டுவிட்டு சென்றான்...

In kathir office..

இனியா :"hi கதிர்... " என்று சிரித்துக்கொண்டே அவன் அருகில் வந்தால்

கதிர் :"hi... " என்று சாதாரணமாக சொல்லிவிட்டு அவளை கடந்து சென்றான்

இனியா அவனையே பார்த்துக்கொண்டு இருந்தால்...

புஷ்பா :"helo madam.. இது உனக்கு தேவையா.. அவன் தான் ஒரு சிடு மூஞ்சி னு தெரியும்ல... "

இனியா :"அவன் அப்புடி இருக்குறது தான் டி ரொம்ப புடிச்சி இருக்கு... இவனை எப்புடியாவது கவுக்கணும் டி... "

புஷ்பா :"எனக்கு என்னமோ.. நீ தான் மண்ணை கவ்வ போறியோ னு தோணுது... "

இனியா :"போ டி.. "

கிஷோர் :"helo கதிர்.. என்ன அங்க.. என்ன சொன்னா அந்த பொண்ணு... "

கதிர் :"அவ கிடக்க.. வேலைய பாரு.. "

கிஷோர் :"என்ன டா.. ஒரு பொண்ணு வலிய வந்து பேசுற.. அத விட்டுட்டு வேலைய பாக்க போற னு சொல்லுற... "

கதிர் :"வேணும் ன நீ போய் பேசு.. "

கிஷோர் :"எனக்கு என்னமோ அவ உன்ன sight அடிக்குற னு தோணுது... "

கதிர் :"எனக்கு என்னமோ என் கிட்ட அடிவாங்க போற னு தோணுது.."

கிஷோர் :"எப்ப சாமி ஆள விடு boss கூப்பிட்டாரு.... " என்று அவன் seat க்கு சென்றான்

To be continue......


👩‍❤‍👩👩‍❤‍👩👩‍❤‍👩





EPISODE 2

கிஷோர் கதிரிடம் boss கூப்பிடுவதாக சொல்லிவிட்டு சென்றான்...

கதிர் அவனின் mail check செய்துவிட்டு boss roomக்கு சென்றான்

கதிர் :"excuse me sir..."

Boss :"வா கதிர்... "

கதிர் :"sir கூப்பிட்டீங்களா... "



Boss :" ss.. கதிர்.. "

கதிர் :"சொல்லுங்க sir..."

Boss :"nthng serious... ஒரு hr formality.. hope you know.. Every year நம்ம office ல இருந்து ஒரு collage க்கு seminar க்கு போவோம்... just a social formality... "

கதிர் :'ss sir..i know..Last time கூட quality team ல இருந்து போய் இருப்பாங்க... "

Boss :" ya.. இந்த time நம்ம team ல இருந்து போகணும்... நேத்து தான் info வந்தது... நான் உங்க name தான் refer பண்ணி இருக்கேன்... "

கதிர் :"sir.. நானா.. நான் எப்புடி... எனக்கு இத பத்தி எந்த idea ம் இல்ல... "

Boss :"no prob.. just final year students க்கு தான் office culture பத்தி ஒரு intro.. Interivew face பண்ணுறது எப்புடி personality development like அப்புடி மட்டும் சொன்னா போதும்... "

கதிர் :"its ok sir.. But நான்.. இதுலாம் hr ல யே பார்த்துக்கலாமே... "

Boss :"பார்க்கலாம்.. but இது நம்ம company policy... "

கதிர் :"ok sir.. ஆனா நான்.. "

Boss :"இது உங்களுக்கு ஒரு training அதான் உங்கள அனுப்புறேன்.. "

கதிர் :"sir. "

Boss :"u r a hard worker..And smart worker.. அதுல no doubt.. But நீங்க next level move ஆக இது பத்தாது... team work very important... "

கதிர் அமைதியாக அவரை பார்த்தான்

Boss :"நீங்க team kuda மிங்கில் ஆகுறதே இல்ல.. அதுலயும் ladies staff kuda.. office ன இதுலாம் ரொம்ப முக்கியம்.. உங்க elevation பத்தி hr ல பேசுன இத ஒரு reason அஹ சொல்லுறாங்க.. So நீங்க போறீங்க அந்த collage ல one week எல்லாருடனும் social ya பழகுறீங்க.. program நல்லபடியா முடிச்சிட்டு வாங்க.. "

கதிர் :"ok sir..."

Boss :"ரொம்ப முக்கியம்.. அங்க எந்த prob வச்சிக்காதிங்க.. hr ல இதுக்கு எல்லாம் ஒரு count இருக்கு... "

கதிர் :"ok sir..."

Boss :"collage கோவை ல.. கிஷோர் கூட போய்ட்டு வாங்க... "

கதிர் :"ok sir.. i ill Take care..." என்று சொல்லிவிட்டு அவனின் seat க்கு வந்தான்

இனியா :"என்ன கதிர்.. என்ன ஆச்சு... "

கதிர் ஏற்கனவே கடுப்பில் இருந்தான் இதில் இவளின் கேள்வி கோவத்தை ஏற்படுத்தியது.. :"mind your business... " என்று சொல்லிவிட்டு கேன்டீன் க்கு சென்றான்

இனியாவின் முகம் வாடி போனது

கிஷோர் :"hey இனியா... அவனை பற்றி தான் தெரியும் ல.. நீ tension ஆகாத... "

இனியா :"டேய்.. நான் எப்புடி டா இருக்கேன்.. "

கிஷோர் :"உன்னக்கு என்ன செம்மயா இருக்க.. Heroine மாதிரி.. cute அஹ இருக்க.. "

இனியா :"நான் மொக்க figure ஹ.. இல்ல super figure ஹ.. அத சொல்லு.. "

கிஷோர் :"நீ super figure அதுல எந்த doubt இல்ல.. இந்த office ல எத்தனை பேர் உன்ன sight அடிக்குறாங்க தெரியுமா.. including me..."

இனியா :"அப்புறம் ஏன் டா இவன் மட்டும் இப்படி பண்ணுறன்.. "

கிஷோர் :"அவன் அப்புடித்தான்... "

இனியா :"அவனை மடக்க எதாவது idea தா டா... "

கிஷோர் :"idea வா.. அவனை impress பண்ணுற மாதிரி எதாவது பண்ணு.. "

இனியா :"அதான் என்ன பண்ண சொல்லுற.. "

கிஷோர் :"எல்லாமே நானே யோசிக்கணுமா.. உன் மூலை fresh அஹ தானே இருக்கு.. "

இனியா :"chi போ.. நானே யோசிச்சிக்குறேன்.. " என்று அவள் சென்றால்

கிஷோர் :"கடுப்பேத்துறாளுங்க... " என்று முணுமுதுகொண்டே வேலை பார்த்துக்கொண்டு இருந்தான்

கதிர் :"என்ன டா புலம்புற.. "

கிஷோர் :"பின்ன என்ன.. நீ வேணாம் வேணாம் னு சொல்லுற உன் பின்னாடியே சுத்துறாளுங்க.. என்ன ஒருத்தியும் கண்டுக்க மட்டுரலுங்க...

கதிர் அவனை பார்த்து :"த்தூ... "

கிஷோர் :"ஆமா எப்பப்பாரு ஏன் இப்படி சிடுசிடு னு இருக்க.. "

கதிர் :"இது என் சுபாவம்.."

கிஷோர் :"கொஞ்சமாவது எல்லாரையும் மதி டா.. நீ மட்டும் தனியாவே இந்த உலகத்துல இருந்துட முடியாது... "

கதிர் :" எனக்கு பெருசா யாரு மேலேயும் நம்பிக்கை இல்ல... யாரையும் மதிக்கவும் மாட்டேன்.. நான் என் வேலைய பாக்குறேன்... என் விசயத்துல தலையிட அவ யாரு... "

கிஷோர் :" அவ ஒரு friendship ல கேட்டு இருப்ப... "

கதிர் :"அவ friendship எனக்கு தேவை கிடையாது... "

கிஷோர் :"ஏன் டா உனக்கு பொண்ணுகளை புடிக்கவே மாட்டுது... "

கதிர் ஒரு பெரும்மூச்சு விட்டு :"என் உலகம் ரொம்ப சின்னது... அதுல வேற யாரும் வரது புடிக்காது.. அத விடு.. சரி ரெடி ஆகிடு.. Next week கோயம்பத்தூர் போறோம்.. "

கிஷோர் :"கோயம்பத்தூர் அஹ ஏன்.. "

கதிர் :"அதான் டா.. அந்த hr activity.. Industrial management பத்தி செமினார் எடுக்கணும்.. One week அங்க.. "

கிஷோர் :"wow.. செம்ம.. ஆனா நீயா பண்ண போற.. "

கதிர் :"ஆமா ஏன்.. "

கிஷோர் :"நீ மொக்கையா பண்ணுவியே.. உனக்கே ரெண்டு பேர் class எடுக்கணும்.. "

கதிர் :"அடிங்க.. கிளம்பு.. "

******

In kathir flat...

விக்னேஷ் சோகமாக உட்கார்ந்து இருந்தான்

கதிர் வேலை முடிந்தது வீட்டுக்கு வந்தான்..

கதிர் :"என்ன டா என்ன ஆச்சு.. ஏன் இப்படி முகத்தை தூக்கி வச்சிக்கிட்டு இருக்க... "

மனோ :"நானும் அதே தான் கேக்குறேன் வந்ததுல இருந்து சொல்ல மாட்டுறான்.. "

கதிர் :"என்ன டா interview என்ன ஆச்சு.. "

மனோ :"வாய தொறந்து சொல்லித்தான் தொலையேன்... "

விக்னேஷ் :"அட போ டா.. "

கதிர் :"என்ன டா வழக்கம் போல வா.. "

விக்னேஷ் :"எல்லாம் என் விதி... "

மணி :"ஏன் டா இப்படி எல்லாம் பேசுற.. "

கதிர் :"சரி அது என்ன கைல letter.. "

விக்னேஷ் :"next week interview க்கு call letter... "

மனோ :"ஒன்னு fauiler ஆனா என்ன டா.. அதான் இன்னொரு வாய்ப்பு வருது ல.. "

விக்னேஷ் :"எனக்கு நம்பிக்கையே போச்சு டா.. இங்க போய் கோட்டைவிட்டது போதாது னு கோயம்பத்தூர் ல வந்து interview atten பண்ண கூப்புடுறாங்க.. "

கதிர் :"கோயம்பத்தூர் ஹ.. Super டா.. போகலாம் வா.. "

மனோ :"நீ எங்க அவன் கூட கிளம்புற.. "

கதிர் :"office வேலைய நான் போக வேண்டி இருக்கு டா.. "

விக்னேஷ் :"நான் வரல.. "

கதிர் :"எனக்கு கூட தான் போக புடிக்கல.. "

மனோ :"லூசு மாதிரி பேசாதீங்க ரெண்டு பேரும்.. போய்ட்டு வாங்க.. ஒரு change ஹ இருக்கும்.. "

விக்னேஷ் :"அட போ டா.. "

மனோ :"யாருக்கு தெரியும்.. இந்த trip உங்க ரெண்டு பேரோட life ல பெரிய turning point ஹ கூட இருக்கலாம்... "

விக்னேஷ் :"அப்புடியா சொல்லுற.. "

மனோ :"ஆமா டா... "

கதிர் :"மச்சி உங்க office ல புதுசா ஒரு பொண்ணு join பண்ணி இருக்கா னு சொன்னியே.. "

மனோ :"ஆமா.... என்ன அவளுக்கு.. "

கதிர் :"இல்ல set ஆகிடுச்சா.. எங்கள ஊருக்கு அனுப்புறத்துல குறியா இருக்கியே.. " என்று சிரித்தான்

மனோ தண்ணீரை எடுத்து அவன் மீது ஊதினான் :"உங்கள போய் motivate பண்ண நினச்சேன்.. "

விக்னேஷ் :"ஏன் டா அவன் சொன்னதுக்கு.. நான் என்ன பண்ணேன். என் மேல ஏன் டா தண்ணி ஊத்துனா.. " என்று மனோ மீது தண்ணி ஊதினான்

கதிர் :"ரெண்டு பேரும் இத சாக்கா வச்சு குளிச்சிட்டிங்களா... "

மனோ :"அவனை புடி டா.. " என்று glass உடன் வந்தான்

விக்னேஷ் :"இவன்ககு தண்ணி பத்தாது டா... " என்று அவன் சட்டையில் ice cubes ஐ போட்டான்.. "

கதிர் :"டேய்.. டேய்.. " என்று கத்திகொண்டே சட்டையை கழட்டினான்

மூவரும் ஒருவரையொருவர் பிடித்து இழுத்து விளையாடி தூங்கி போனார்கள்....

*******

சரிங்க நம்ம hero பத்தி பார்த்தாச்சு.. வாங்க heroine பார்க்க போகலாம்.. வேற எங்கயும் இல்ல கோயம்பத்தூர் க்கு தான் அங்க தான் இருகாங்க...

ஒரு அழகிய வீடு.. வீட்டை சுற்றி தென்னை மரங்கள்.. வீட்டின் வாசலில் மருதாணி செடி ஒரு புறம்.. மல்லி செடி மறுபுறம்... காம்பௌண்ட் gate ல் இருந்து வீட்டின் முற்றம் வரை ரோஜா செடிகள்...

வீட்டின் முற்றத்தில் ஒரு ஊஞ்சல்... அதில் அமர்ந்து முத்து paper படித்துக்கொண்டு இருந்தார்

வீட்டின் வாசலில் sctooty ஐ வேகமாக நிறுத்தினால் கீர்த்தனா

முத்து :"பாத்துமா.. பாத்து.. விழுந்துட போற... "

கீர்த்தனா :"அதுலாம் ஒன்னும் ஆகாது uncle.. எங்க உங்க அருமை பொண்ணு.. "

முத்து :"குளிச்சிட்டு இருக்க டா.. "

கீர்த்தனா :"காலேஜ் க்கு போகணும் கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா... "

சமையல் அறையில் இருந்து coffeeயுடன் வந்தால் சாந்தி :"கேளு மா.. நீயே நல்லா கேளு.. நான் கேட்ட தான் பதிலே காணோம்.. " என்றால்

ரகு :"ஏன் மா எப்ப பாரு என் தங்கச்சி யா குறை சொல்லிட்டே இருக்க.. "

சாந்தி :"எப்ப நான் ஒன்னும் சொல்லல பா.. "

ரகு :"hey வாலு.. என்ன காலைல இந்த பக்கம்... "

கீர்த்தனா :"ஒன்னும் இல்ல அண்ணா.. உன் செல்ல தங்கச்சிக்கு இன்னைக்கு பொறந்தநாள் ஆச்சே அதான்... "

ரகு :"வழக்கம் போல இந்த வருஷம் மொக்க வாங்க போற.. அப்புறம் என்ன.. "

கீர்த்தனா :"பார்த்துடலாம் அதையும் இன்னைக்கு... " என்று கதவின் அருகில் நின்றாள்

சாந்தி :"hey கயல்விழி.. எவ்வளவு நேரம் குளிப்ப சீக்கிரம் வா... "

"இதோ வந்துட்டேன்... " என்று கதவை திறந்தால் கயல்விழி.. Pink நிற பாவாடை தாவணி.. தலை நிறைய மல்லி பூ.. என்று அழகு தேவதையாய்

கீர்த்தனா :"ha.." என்று சொல்ல வரும் போது அவளின் வாயில் ஒரு பெரிய லட்டுவை எடுத்து அழுத்தினாள்... கீர்த்தனா எதுவும் சொல்ல முடியாமல் முழித்தால்.. கயல்விழி ரகு அருகில் ஓடிச்சென்றால் :"அண்ணா... " என்று

ரகு :"பிறந்தநாள் வாழ்த்துக்கள்... " என்று அவளின் நெற்றியில் முத்தம்மிட்டான்

கயல் :"நன்றி... " என்று முத்துவையும்.. சாந்தியையும் எழுத்து வந்து ஒன்னராக நிறுத்தினால்.. அவர்களின் காலில் விழுந்தால்

முத்து :"நூறு வருஷம் நல்லா இருக்கனும்... "

இப்போது கீர்த்தனா பக்கம் வந்தால்.. கீர்த்தனா முகத்தை திருப்பி கொண்டால்

கயல் :"என் செல்ல friend ல.. " என்று அவளின் கன்னத்தை பிடித்து திருப்பினால்

கீர்த்தனா :"போ.. இன்னைக்கு உன் பொறந்தநாள் ஹ போச்சு.. Happy birthday.. " என்று சாக்லேட் எடுத்து நீட்டினாள்

கயல் :"thank you... " என்று வாங்கிகொண்டாள்

கீர்த்தனா ரகுவிடம் :"ok.. Wish நீங்க பண்ணி இருக்கலாம்.. ஆனா gift நான் தான் கொடுத்தேன்.. "

கயல் :"hey.. என் அண்ணா தான் எனக்கு ngt 12 clk wish பண்ணி இந்த dress குடுத்துடானே...

ரகு :"எப்பவுமே என் தங்கச்சி க்கு நான் தான் first.. "

கீர்த்தனா :"அய்ய.. " என்று அவனை பார்த்து ஒழுங்கு காட்டினாள்

முத்து :"ஏன் ரெண்டு பேரும் சண்டை போட்டுக்குறிங்க.. வாங்க சாப்பிடலாம்.. "

கயல்.. கீர்த்தனா.. ரகு.. முத்து.. Dinnig table லில் அமர்ந்தனர்

முத்து கீர்த்தனாவை பார்த்து :"அக்கா க்கு கல்யாணம் ஆச்சே எப்புடி இருக்க.. "

கீர்த்தனா :"ம்ம்.. நல்லா இருக்க uncle.. "

சாந்தி :"ஏன் டி.. இங்க நான் ஒருத்தி மட்டும் கஷ்ட பட்டுட்டு இருக்கேன்.. Atleast சமாச்சத்தை எடுத்து வைக்கலாம் ல... "

ரகு :"ஏன் மா அவளை கத்துற.. பாவம் குழந்தை.. " என்று அவன் எழுத்து சென்றான்

கீர்த்தனா :"ஆமா கொஞ்சம் பெரிய size குழந்தை தான்.. " என்று கண் அடித்தால்

சாந்தி :"இப்படியே நல்லா செல்லம் குடு டா.. போற இடத்துல என்ன தான் திட்ட போறாங்க... "

கயல் :"அம்மா start பண்ணிட்டியா.. "

ரகு :"என் தங்கச்சிக்கு நான் வீட்டோட மாப்பிளை பார்ப்பேன்..."

கயல் :"thanks அண்ணா.. "

சாந்தி :"அப்போ.. என்ன முதியோர் இல்லத்துல சேர்த்துடுங்க... "

முத்து :"சரி.. சரி.. சும்மா கத்தாதே.. "

சாந்தி :"இங்க பாருங்க.. இது final year.. Exam முடிச்சதும் மாப்பிளை பார்க்கணும்.."

முத்து :"hey.. என்ன டி.. குழந்தை கொஞ்ச நாள் நம்ம கூட இருக்கட்டும்... "

கயல் :"அண்ணா நான் வேளைக்கு போகணும்.... "

சாந்தி :"அதுலாம் ஒன்னும் வேண்டாம்... "

ரகு :"அம்மா சும்மா இரு.. "

கயல் :"thanks அண்ணா.. Bye.. சாந்தி.. Bye முத்து.. " என்று கீர்த்தனா உடன் வெளியே சென்றால்

To be continue...

😍😍




Episode 3


கயல்.. கீர்த்தனா.. Collageக்கு வந்தனர்...

"Happy birthday kayal.."

" many more happy Returns of the day kayal... "

"Happy returns of the day kayal.. "

"பிறந்தநாள் வாழ்த்துக்கள் கயல்... "

என்ற அனைவரின் வாழ்த்துக்கள்லையும் கடந்து class க்கு சென்றால்

கீர்த்தனா :"அப்பப்பா.. கயல் க்கு தான் எத்தனை fans.. "



பவானி :"ம்ம்ம்.. இப்ப வரைக்கும் senior ல இருந்து junior வரைக்கும்.. ஏன் pg sutdents கூட வந்து கேட்டுட்டு போய்ட்டாங்க.. "

ஸ்வாதி :"ஆமா.. கயல் எங்க.. கயல் எங்க.. கயல் எங்க.. முடியல.. "

பிரியா :"எங்கள எல்லாம் பார்த்தா ஆள தெரியல போல... "

கயல் :"hey விடுங்க டி.. "

பவானி :"எப்புடி டி சிரிச்சிகிட்டே இருக்க... "

கயல் :"இது தான் என் சுபாவம்.. நான் இப்படி தான்.. என் உலகம் ரொம்ப பெருசு.. Simple.. எல்லாரையும் மதிக்கணும்.. மத்தவங்க feelings க்கு நாம மதிப்பு குடுக்கணும்.. தானா நம்ம சுத்தி ஒரு கூட்டம் சேரும்.. "

கீர்த்தனா :"அது சரி... "

பிரியா :"சரி ரொம்ப புடிச்சது யாரு... "

கயல் :"no doubt..என் அண்ணா தான்.. அவன் தான் எனக்கு எல்லாமே... "

ஸ்வாதி :"சரி கதை பேசுனது போதும்.. உன்ன HOD mam கூப்புடுறாங்க.. "

கயல் :"வா டி.. போகலாம்... " என்று கீர்த்தனாஉடன் வெளியே வந்தால்

இருவரும் HOD room நோக்கி சென்றனர்

கீர்த்தனா கயல் காதோரம் :"hey.. டக்குனு திரும்பாத.. "

கயல் :"என்ன டி.. "

கீர்த்தனா :"பிரவீன் பின்னாடி உன்ன ரொம்ப நேரமா follow பண்ணிக்கிட்டு வரான்.. "

கயல் :"அப்புடியா... "

கீர்த்தனா :"இந்த வருடமாவது உன் கிட்ட love சொல்லுறானா னு பார்க்கலாம்... "

கயல் :"இவ ஒருத்தி சும்மா இரு டி... "

கீர்த்தனா :"hey பாவம் டி அவன் ரொம்ப நல்லா பையன்.. First year ல இருந்து உன் பின்னாடி சுத்துறான்... "

கயல் :"வீனா என் கிட்ட அடிவாங்காத... "

பிரவீன் :"கயல்.. கயல்விழி... "

கீர்த்தனா :"கூப்டுட்டான்... " என்று நின்றாள்

கயல் :"உன் பெயர் கயல்விழி யா.. "என்று முறைத்து கொண்டே :"சொல்லு... " என்று திரும்பினாள்

பிரவீன் :"happy birthday கயல்விழி... " என்று ஒரு ரோஜா பூவை நீட்டினான்

கயல் :"thanks.." என்று அந்த பூவை வாங்கினால்

பிரவீன் :"இந்த dress உனக்கு ரொம்ப அழகா இருக்கு... "

கயல் :"thanks again... "

கீர்த்தனா :"சொல்லு டா... " என்று சைகை செய்தால்

கயல் :"எதாவது சொல்லனுமா பிரவின்... "

பிரவீன் :"nthng.. Nthng... "

கயல் :"ok.. Bye..

பிரவீன் :"கயல்... "

கயல் :"சொல்லு... "

கீர்த்தனா :"all the best..All the best.. " என்று கயல் பின்னால் இருந்து சைகை செய்தால்

பிரவீன் :"HOD room கா போற.. "

கயல் :"இப்படி போன.. HOD Room தான் வரும்.. "

பிரவீன் :"சரி.. சரி.. பார்த்து போய்ட்டு வா... "

கயல் :"சரி.. " என்று அங்கு இருந்து நகர்ந்தாள்

கீர்த்தனா :"டேய்.. சரியான சொதப்பல் case டா நீ.. HOD room என்ன முதுமலை காட்டுல யா இருக்கு.. பார்த்து போ னு சொல்லுற.. "

பிரவீன் :"என்ன பண்ண.. அவள பார்த்தாலே ஒரே பதட்டமா ஆகிடுது.. "

கீர்த்தனா :"இப்படியே சொல்லு.. இன்னும் ஒரு மாசத்துல காலேஜ் முடிய போகுது.. அவ வீட்ல வேற.. அவளுக்கு கல்யாணம் அது இது னு சொல்லுறாங்க.. "

பிரவீன் :"அச்சச்சோ... "

கீர்த்தனா :"சீக்கிரமா சொல்லுற வேலைய பாரு.. "

பிரவீன் :"அவ கிட்ட கொஞ்சம் என்ன பத்தி என்ன நினைக்குற னு கேட்டு சொல்லேன்.. "

கீர்த்தனா :"அவளுக்கு எந்த ideaம் இல்ல.. எல்லாமே அவ அண்ணா தான்.. "

பிரவீன் :"பேசாம அவங்க கால்ல விழுந்தடவா.. "

கீர்த்தனா :"அது உன் சாமர்த்தியம்.. சரி நான் கிளம்புறேன் " என்று HOD room க்கு ஓடினாள்

*****

In HOD room

கயல் :"ex-cuse me. Mam... "

Hod :"helo.. கயல்.. Looking grogeous... happy birthday to you... "

கயல் :"thank u mam.. "

கீர்த்தனா :"helo mam.. "

HOD:" ok next week நம்ம collage க்கு chennai ல இருக்க ஒரு IT company ல இருந்து seminar எடுக்க வராங்க.. "

கீர்த்தனா :"ohhh... "

கயல் :"என்ன topic mam.. "

HOD :"ம்ம்.. Personality dev. Office enviroment.. team building..Like that.. அவங்க இங்க one week இருப்பாங்க.. collage க்கு அவங்கல recive பண்ணி மத்த arrangements நீங்க தான் பார்க்கணும்... "

கீர்த்தனா :"ok mam.. அவங்க hotel booking எல்லாமா.. "

HOD :" no..No..அது admin ல பார்த்துப்பாங்க.. வேணும் ன ஒரு formal intro மட்டும் போதும்... "

கயல் :"ok mam.. "

HOD :"அவங்க தர tips..உங்க campus interview க்கு helpfull ஹ இருக்கும்.. எல்லாருக்கும் சொல்லிடுங்க.. இந்தாங்க அவங்க details intha letter ல இருக்கு.. "

கயல் :"ok mam.. Dnt worry.. நாங்க பார்த்துக்குறோம்.. " என்று வெளியே வந்தனர்..

கீர்த்தனா :'hey.. கயல்.. நில்லு கயல்.. நில்லு டி.. " என்று கத்திகொண்டே வந்தால்

கயல் :"என்ன.. ஏன் இப்படி கத்துற.. "

கீர்த்தனா :"hey உனக்கு பிரவீன் ன புடிச்சிருக்கு தானே.. உண்மையே சொல்லு.. "

கயல் :"அப்புடின்னு உனக்கு யாரு சொன்னா.. "

கீர்த்தனா :"பின்ன புடிக்காமலா.. அவன் குடுத்த பூவை இன்னும் கையில் வச்சிக்கிட்டு இருக்க... "

கயல் அவளை பார்த்து சிரித்துவிட்டு அருகில் இருந்த பிள்ளையார் சிலைக்கு அந்த பூவை வைத்துவிட்டு கையெடுத்து கும்பிட்டு விட்டு நகர்ந்தாள்

கீர்த்தனா :"hey என்ன டி பண்ணுற... "

கயல் :"இங்க பாரு நீயா ஒன்ன கற்பனை பண்ணிக்கிட்டா அதுக்கு நான் பொறுப்பாக முடியாது.. "

கீர்த்தனா :"அப்புடின்னா.. "

கயல் :"அப்புடின்னா.. எனக்கு அவன் மேல எந்த intrest ம் இல்ல.. அவன் என்ன பொறுத்த வரை.. என் classmet அவ்வளவு தான்.. "

கீர்த்தனா :"ஆனா அவன் உன்ன sincere ஹ love பண்ணுறான் டி.. "

கயல் :"இங்க பாரு கீர்த்து.. எனக்கு எல்லாமே என் அண்ணன் தான் இந்த love அது இது எனக்கு புடிக்காது.. அவன் love பண்ண அது அவன் பிரச்சனை நான் என்ன பண்ணமுடியும்... "

கீர்த்தனா :"சரி விடு... நீ tension ஆகாத.. "

கயல் :"நான் ஒன்னும் tension ஆகல.. இன்னும் ஒரு மாசம் தான் அதுக்கு அப்புறம் அவன் அவனுடைய வேலைல busy ஆகிடுவான்.. நாமளும் தான் so நீ free யா விடு... "

கீர்த்தனா :"சரி ok.. அந்த letter ஹ open பண்ணு.. யாரு வராங்க னு பார்க்கலாம்.. "

கயல் letter ஐ open செய்து படித்தால் :"Mr.கதிர்... அவர் தான் வராரு... "

(பின்னாளில் இந்த பெயர் தான் இவள் வாழ்க்கை ஆக போவது என்று இப்போ அவளுக்கு தெரியாது... )

*********

In chennai....

கிஷோர் கதிர் க்கு call செய்தான்

கிஷோர் :"எங்க பா இருக்க... "

கதிர் :"இந்தோ வந்துட்டேன்... "

கிஷோர் :"இத தான் one hr ஹ சொல்லிட்டு இருக்க.. "

கதிர் :"airport parking ல தான் இருக்கேன்.. ஒரு 10 mins..."

கிஷோர் :"சீக்கிரம் வா... " என்று வைத்தான்

கதிர் :"சீக்கிரம் நடங்க டா... அவன் அங்க கத்திக்கிட்டு இருக்கான்... "

மனோ :"எல்லாத்தையும் எடுத்துக்கிட்டா ல அப்புறம் நான் எடுத்துக்கிட்டு வர மாதிரி வசிக்காத...."

விக்னேஷ் :"எடுத்துக்கிட்டேன் டா... "

கதிர் :"அதோ அங்க இருக்கான்... " என்று கிஷோர் நோக்கி சென்றனர்

கிஷோர் :"எவ்வளவு நேரம் பா.. "

கதிர் :"உன்ன யாரு சீக்கிரம் வர சொன்னது.. "

கிஷோர் :"அட பாவி.. உன் கூட போய் என்ன அனுப்பி இருகாங்க பாரு.. "

கதிர் :"சரி விடு.. "

கிஷோர் :"எப்புடி இவன் கூட எல்லாம் friendship maintain பண்ணுறீங்க.. "

மனோ :"பழகிடுச்சு boss... "

இனியா :"hi.. Guys... " என்று வந்தால்

கதிர் :"இவ எப்புடி இங்க... " என்று கிஷோரை முறைதான்

மனோ :"hi.. " என்று மனோ கை கொடுத்தான்

கிஷோர் :"இனியாவும் நம்ம கூட தான் வர போற.. "

கதிர் :"என்ன.. என் கிட்ட சொல்லவே இல்லையே.. "

இனியா :"சொன்னா தான் கூட்டிட்டு போக மாட்டியே.. "

கதிர் :"team ல எல்லாரும் வந்துட work யாரு பாக்குறது.. Boss எப்புடி ok சொன்னாரு.. "

இனியா :"நான் leave எடுத்துக்கிட்டேன்... "

கதிர் :"so unofficial... "

இனியா :"ம்ம்ம் ஆமா.. "

கதிர் :"கிஷோர்.. ஒழுங்கா இவள கிளம்ப சொல்லு.. இல்லனா இப்ப boss க்கு call பண்ணுறேன்.. "

கிஷோர் :"டேய் நீயா சுமக்க போற.. Flight தானே சும்மக்க போகுது... "

கதிர் :"ok.. அப்பா நீங்க போங்க.. நான் வரல.. "

இனியா :"ஏன் கதிர்.. என்ன பிடிக்கலையா.. "

கதிர் :"எத்தனை தடவை சொல்லுறது உனக்கு.. அறிவுஇல்லை.. வெறுப்பேத்திக்கிட்டு... " என்று கத்தினான்

இனியா அழுதுகொண்டே அங்கு இருந்து சென்றால்

மனோ :"டேய்.. என்ன டா.. பொண்ணு கிட்ட இப்படிதான் பேசுவியா... "

கதிர் :"என்ன வெறுப்பேத்துனா.. யாரா இருந்தாலும் இப்படிதான் பேசுவேன்.. "

விக்னேஷ் :"என்ன தான் இருந்தாலும்.. Public place டா.. "

கதிர் ;"என்னால என்னை யாருக்காகவும் மாத்திக்க முடியாது... "

கிஷோர் :"சரி ok.. Cool.. Cool..Cool.."

கதிர் :"மகனே உன்ன சொல்லணும்.. நீ தானே அவளுக்கு சொன்ன.. "

கிஷோர் :ஐயோ.. இப்ப என் கிட்ட வந்துட்டியா... "

மனோ :"சரி.. சரி.. விடுங்க... டேய் ரெண்டு பேருக்கும் all the best.. நல்லா பண்ணுங்க.. "

கதிர் :"எனக்கு என்னமோ உன் மேல நம்பிக்கை இல்ல... "

மனோ :"chi போ டா.. "

கிஷோர் :"இந்தா HR இத குடுக்க சொன்னாங்க... " என்று ஒரு letter ஐ நீட்டினான்

கதிர் அதை வாங்கி படித்தான் :"அட சா.. என்ன டா இது... "

கிஷோர் :"என்ன ஆச்சு.. "

கதிர் :"அங்க நம்ம co-ordinator.. ஒரு பொண்ணு.. கயல்விழி யாம்.. சத்திய சோதனை... " என்று தலையில் அடித்துக்கொண்டான்

கிஷோர் :"அப்பாடா இப்ப தான் நிம்மதியா இருக்கு.. எங்க ஒரு பையனா போட்டுடுவாங்களோ னு நினச்சேன்... "

கதிர் :"அது co.Ed..தானே அப்புறம் ஏன் டா.. "

மனோ :"hey விடு டா.. just one week தானே.. அவ என்ன உன் கூடவேவா இருக்க போற.. "

விக்னேஷ் :"free யா விடு மச்சி.. "

கிஷோர் :"உன் கோவத்தை எல்லாம் அங்க போய் காட்டாத.. boss சொன்னது நியாபகம் இருக்கு ல.. "

கதிர் மீண்டும் அந்த பெயரை படித்தான் :"கயல்விழி... ஐயோ கொடுமையே.. " என்று நினைத்துக்கொண்டான்

(இந்த பெயருக்காகவே இவன் வாழ போகிறேன்.. அது தெரியாமல் கவலை படுறாரு நம்ம hero... )

To be continue...


👩‍❤‍👩😍


Episode 4

 

கதிர்.. விக்னேஷ்.. கிஷோர்.. கோயம்பத்தூர் airport வந்து சேர்ந்தனர்...

கிஷோர் :"என்ன மச்சான்.. Receive பண்ண வருவாங்க னு சொன்னாங்க.. யாரையும் காணோம்... "

கதிர் :"அதான் டா பொண்ணுங்க.. Irresponsible... "

விக்னேஷ் :"டேய் time 9 ஆகுது.. இந்த time க்கு எப்புடி டா.. இது என்ன சென்னை யா... "

கதிர் :"அப்புறம் எல்லாத்துலையும் சம உரிமை கேக்குறாங்க.. இது கூட பன்னலான எப்புடி.. "

கிஷோர் :"receive பண்ணுறதுக்கும்.. சம உரிமைக்கும் என்ன சம்மந்தம்... "

கதிர் :"irritating idiots... "



விக்னேஷ் :"எப்ப டேய்.. நீ airport ல தைய தக்க னு சாமி ஆடாத.. Taxi வந்துடுச்சு வா hotel க்கு போகலாம்... "

மூவரும் hotel க்கு சென்றனர்...

கிஷோர் :"bore அடிக்குதே.. என்ன பண்ணலாம்.. "

கதிர் :"திருப்பி அடி சரியா போய்டும்... "

கிஷோர் :'ஆமா இவன் கூட எப்புடி friend ஆனீங்க.. "

விக்னேஷ் :"நாங்க childhood ல இருந்தே friends. எப்பவுமே ஒண்ணா தான் இருப்போம்.. "

கிஷோர் :"இவன் கூட ன பெரிய விஷயம் தான்.. "

கதிர் :"என்ன டா வேணும் இப்போ உனக்கு.. "

கிஷோர் :"bore அடிக்குது.. அதான் சொன்னேன்.. earliy flight book பண்ணலன்னு னு.. "

கதிர் :"அப்போ மட்டும் bore அடிக்காத.. "

கிஷோர் :"ஆமா.. நம்ம receive பண்ண அந்த பொண்ணுங்க வந்து இருபாளுங்க நமக்கும் bore அடிச்சி இருக்காது.. "

கதிர் அவனை முறைதான்

கிஷோர் :"சரி.. எனக்கு bore அடிச்சி இருக்காது... "

விக்னேஷ் :"அட விடுங்க boss... வாங்க வெளிய ஒரு சின்ன walk போய்ட்டு சாப்புட்டு வரலாம்... Time ஆகிடும்.. "

கதிர் :"ஆமா வாங்க போகலாம்.. " என்று கிளம்பினர்..

மூவரும் சாப்பிட்டு முடித்து விட்டு பேசிக்கொண்டே நடந்தனர்...

கிஷோர் :"அப்புறம் interview க்கு ரெடி ஆகிட்டீங்களா..."

விக்னேஷ் :"ஆச்சு boss.. Pg முடிச்சு 2 yrs ஆகுது.. சரியா job set ஆகல.. "

கதிர் :"விடு மச்சான் இது set ஆகிடும்... "

கிஷோர் :"நாளைக்கு எத்தனை மணிக்கு interview.. "

விக்னேஷ் :"afternoon தான்... "

கிஷோர் :"வேலை கடைச்சதும் என்ன plan... "

விக்னேஷ் :"பெருசா என்னங்க.. ஒரு சில commitments இருக்கு அத முடிக்கணும்... "

கிஷோர் :"நீங்களும் இவனை மாதிரி தானா.. கல்யாணம் எல்லாம் plan இல்லையா.. "

கதிர் :"டேய் உங்களுக்கு பேச வேற topic கிடைக்காதா... "

விக்னேஷ் :"இவன மாதிரியா.. நானா.. No way.. எனக்கு புடிச்சமாதிரி பொண்ண பார்த்த.. கண்டிப்பா கல்யாணம் பண்ணிப்பேன்.. இவனை மாதிரி life waste பண்ண மாட்டேன்... "

கதிர் :"என்ன இது தான் life waste பண்ணுறதா... "

விக்னேஷ் :"கண்டிப்பா.. "

கதிர் :"அப்போ கல்யாணம் பண்ணா தான் life fullfill ஆகுமா.. "

விக்னேஷ் :"ஒரு பொண்ணால தான் life fullfill ஆகும்.. "

கதிர் :"அப்புடி பட்ட fullfillness எனக்கு வேண்டாம்... "

கிஷோர் :"டேய்.. ஏன் டா இப்படி சொல்லுற.. இது வரைக்கும் ஒரு பொன்னையாவது sight அடிச்சி இருக்கியா.. "

விக்னேஷ் :'சுத்தம்.. ஒரு பொன்னையாவது திட்டாம இருந்து இருக்கானா னு கேளுங்க... "

கிஷோர் :"பொண்ணுகளை பத்தி தெரியாம ஏன் டா இப்படி பேசுற.. "

கதிர் :"என்ன பொறுத்த வரைக்கும்.. பொண்ணுங்க ன irresponsible and சுயநலம் புடிச்சவங்க... அழுதே காரியத்தை சாதிக்கணும் னு நினைக்குறவங்க... Total waste... "

கிஷோர் :"ஏன் டா.. நம்ம பெத்தவங்க கூட ஒரு பொண்ணு தான்.. அத மறந்துடாத.. "

கதிர் :"நான் எல்லாரையும் தான் சொல்லுறேன்... "

கிஷோர் :"இத உன் அம்மா கேட்டா எவ்வளவு கஷ்ட படுவாங்க... "

கதிர் :"வர சொல்லு டா.. வர சொல்லு.. நானும் அதுக்கு தான் காத்துகிட்டு இருக்கேன்.. வரட்டும் கேட்கட்டும்.. " என்று tension ஆக அவனின் சட்டையை பிடித்தான்

விக்னேஷ் :"டேய்.. டேய்.. ஏன் டா.. விடு டா அவர.. "

கிஷோர் :"இப்ப நான் என்ன சொல்லிட்டேன்.. "

விக்னேஷ் :"அவன் அப்புடி தான் அவன் அம்மா பத்தி பேசாதீங்க.... "

கதிர் :"sry... "

கிஷோர் :"விடு சரக்கு அடிக்கலாமா... "

கதிர் :"சரி.. வா... சரக்கு அடிக்கலாம்.. கடுப்பாகிடுச்சு.... "

விக்னேஷ் :"டேய் போங்க டா.. நாளைக்கு எனக்கு interview இருக்கு.. நான் வரல கிளம்புறேன்.. ஒழுங்கா வந்து சேருங்க.. " என்று கிளம்பினான்...

*********

கயல் :"எல்லாம் உன்னால தான்.. இப்ப உனக்கு இந்த eyeliner ரொம்ப முக்கியம்.. உன்ன என்ன பொண்ணு பார்க்கவ வராங்க... " என்று airport வாசலில் நின்று கத்தினாள்

கீர்த்தனா :"நான் என்ன டி பண்ணுவேன்.. நீ தானே இந்த flower booke.. வாங்கிட்டு வர சொன்ன.. shop ல late பண்ணிட்டான்.. "

கயல் :"சும்மா காரணம் சொல்லாத கீர்த்தனா.. "

கீர்த்தனா :"இப்ப என்ன பண்ணுறது.. "

கயல் :"அவங்க என்ன நினைச்சி இருப்பாங்க.. நாம காலேஜ் பத்தி... "

கீர்த்தனா :"விடு டி... இது சும்மா formality தானே... "

கயல் :"formality க்கு தான் இவ்வளவு makeup போட்டுக்கிட்டு வந்தியா.. "

கீர்த்தனா :"சரி.. சென்னை ல இருந்து வாரங்களே.. கொஞ்சம் நல்லா இருக்குமே னு.. கொஞ்சம் தான் போட்டேன்.. "

கயல் அவளை முறைத்தாள்

கீர்த்தனா :"ஆளு வேற IT company ல work பண்ணுறாரு.. பார்க்க எப்புடியும் செம்மயா இருப்பாரு அதான்.. "

கயல் :"யாருக்கு தெரியும் வரது 50 வயசு கிழவனா இருந்தா... "

கீர்த்தனா :"இல்லையே.. அவருக்கு 25 yrs தானே.. "

கயல் :"எப்புடி டி.. "

கீர்த்தனா :"admin ல check பண்ணிட்டேன்... " என்று கண் அடித்தால்

கயல் :"இதல்லாம் correct ஹ பண்ணு.. ஆனா time க்கு வராதா... "

கீர்த்தனா :"பொலம்பதா... Time ஆச்சு கிளம்பலாம்.. நாளைக்கு காலேஜ் ல பார்த்துக்கலாம்... "

கயல் க்கு ரகு call செய்தான்

கயல் :"சொல்லு அண்ணா.. "

ரகு :"என்ன மா அவங்கள receive பண்ணிட்டியா.. எங்க இருக்க... "

கயல் :"இல்ல ன.. இந்த கீர்த்தனாவால் late ஆகிடுச்சு.. அவங்கள பார்க்க முடியல.. "

ரகு :"அச்சச்சோ இப்ப என்ன பண்ண போற.. "

கயல் :"அதான் தெரியல அண்ணா.. அவங்க காலேஜ் பத்தி தப்ப நினச்சு இருப்பாங்க.. "

ரகு :"சரி ok.. அவங்க தாங்கி இருக்க hotel க்கு போய் ஒரு hi சொல்லிட்டு வந்துடுங்க.. "

கயல் :"best idea அண்ணா... "

ரகு :" Late ஆகிடுச்சு.. உன்ன கூட்டிட்டு வர.. நான் அந்த hotel க்கு வரேன்.."

கயல் :"ok.. அண்ணா.. " என்று phone ஐ வைத்தால்

கீர்த்தனா :"என்ன டி சொன்னாங்க.. "

கயல் :"hotel க்கு போய் பார்த்துட்டு வர சொன்னாங்க... "

கீர்த்தனா :"அய்யயோ.. இப்பவே late ஆகிடுச்சு.. நான் வரல.. "

கயல் :"சரி போ.. நான் மட்டும் போய் ஒரு welcome சொல்லிட்டு வரேன்.. அண்ணா வரேன் னு சொல்லி இருகாங்க... "

கீர்த்தனா :"சரி டி.. பார்த்து போ.. Scooty எடுத்துக்கிட்டு போ.. நான் cab ல போய்க்குறேன்..." என்று கிளம்பினாள்

கயல் வண்டியை எடுத்துக்கொண்டு helmet போட்டுக்கிட்டு hotel க்கு புறப்பட்டாள்....

****

கதிர்.. கிஷோர் இருவரும் நன்றாக குடித்துவிட்டு.. ரோட்டில் தள்ளாடிய படி நடந்து வந்தனர்...

கிஷோர் :"ஐயோ இதுக்கு மேல என்னால நடக்க முடியாது... " என்று ரோட்டின் ஓரமாக உட்கார்ந்தான்

கதிர் :"டேய் கொஞ்சம் தூரம் தான் டா.. வா போய்டலாம்... "

கிஷோர் :முடியாது... முடியாது.. முடியாது.. "

கதிர் :"இந்த road ல வேற யாரும் இல்ல.. யாரு கிட்ட help கேக்குறது... " என்று பார்த்தான் தூரத்தில் ஒரு வண்டி வருவது தெரிந்தது.. "அதோ வண்டி வருது.. லிப்ட் கேக்கலாம்... " என்று அந்த வண்டியை மடக்கினான் (அது நம்ம கயல் வண்டி தான் )

கயல் :"Hey..hey.. " என்று வேகமாக break பிடித்தால்

கதிர் :"excuse me ஒரு help... " என்று வாய் குளறியபடி சொன்னான்..

கயல் அவனை கோவமாக முறைத்தாள்... அங்கு இருந்து வண்டியை எடுக்க முயற்சித்தால்

கதிர் :"helo help கேக்குறேன்.. நீ வண்டியை எடுக்குற.. ஒழுங்கா வந்து help பண்ணிட்டு போ.. " என்று வண்டியின் handle ஐ பிடித்தான்

கயல் எதுவும் பேசாமல் அவனையே முறைத்தாள்

கதிர் :"என்ன நீ helmet கூட கழட்டாம திமிரா உட்கார்ந்து இருக்க.. வண்டி ய விட்டு இறந்கு... "

கயல் helmet ஐ கழட்டினாள்

இருவரும் ஒருவரையொருவர் முறைத்துக்கொண்டனர்..

கதிர் :"haiya.. என்ன look.. வா.. வந்து help பண்ணு... "

கயலுக்கு கோவம் தலைக்கு ஏறியது..

கதிர் :"ஐயோ.. இங்க என்ன booke.. யாரை ஏமாத்த.. " என்று அதை எடுத்து பிச்சி போட்டான்...

கயல் அவனை தள்ளிவிட்டு வண்டியை எடுத்து சென்றால்

கிஷோர் :"மச்சான் என்ன டா... "

கதிர் :"டேய் பாரு டா அந்த பொண்ணு.. எவ்வளவு திமிரா போய்ட்டா... "

கிஷோர் :"விடு டா நடத்து போலாம்... "

****

கயல் hotle க்கு போகாமல் நேராக வீட்டுக்கு சென்றால்

போகும் போதே கோவமாக செருப்பை தூக்கி எறிந்தாள்... கோவமாக room க்கு சென்றால்

சாந்தி :"என்ன ஆச்சு... இந்த பொண்ணுக்கு... "

முத்து :"madam வரும்போதே செம்ம கோவத்துல இருகாங்க.. "

சாந்தி :"சாப்பிட்டாலோ என்னமோ தெரியலே.. "

முத்து :இரு அவ அண்ணன் வரட்டும்.. அவன் தான் correct... "

ரகு கயல் க்கு call செய்தான்.. அவளின் mobile hall லில் இருந்தது...

முத்து :"helo.. எங்க டா இருக்க.. "

ரகு :"அப்பா... கயல் எங்க.. அவ phone நீங்க எடுக்குறீங்க.. "

முத்து :"அவ வீட்டுக்கு வந்துட்டா.. நீ வா.. "

அடுத்த 20mins ல் ரகு வீட்டுக்கு vanthan

சாந்தி :"எங்க டா போன..வேளைக்கு போய்ட்டு வீட்டுக்கு வர வேண்டியது தானே... "

ரகு :"தங்கச்சி எங்க.. " என்று கேட்டுக்கொண்டே அவளின் room க்கு சென்றால்

கயல் கட்டிலில் படுத்து இருந்தால்

ரகு :"அம்மு... என்ன ஆச்சு டா... உனக்காக நான் அங்க wait பண்ணிட்டு இருக்கேன்.. நீ இங்க வந்துட்ட.. அங்க போகலையா.. "

கயல்:"அண்ணா.. போகுற வழியில.. ஒருத்தன் குடிச்சிட்டு வந்து.. என் கிட்ட ரொம்ப rude ஹ நடத்துக்கிட்டான்... பொறுக்கி... "

ரகு :"அப்புறம்.. "

கயல் :"நான் வச்சி இருந்த flowers ஹ.. பிச்சைபோட்டுட்டான்.. அவனை தள்ளிவிட்டு வந்துட்டேன்... "

ரகு :"ஏன் எனக்கு ஒரு phone பண்ணி இருக்க கூடாதா.. அவனை.. "

முத்து :"அடங்கு டா.. அவ பண்ணது தான் சரி.. துஷ்டனை கண்டா தூர விலகுறது தான் சரி... "

சாந்தி :"ஐயோ இவ நல்லா படியா வந்தாலே அதுவே போதும்... அதுக்கு தான் கண்ட நேரத்துல வெளிய போகாத னு சொல்லுறது... "

கயல் :"எப்புடி அண்ணா.. இப்படிலாம் கூட ஆளுங்க இருகாங்க... "

சாந்தி :"அத விடு வா சப்புடலாம்... "

கயல் :"எனக்கு வேண்டாம்... "

ரகு :"நீ ஏன் டா கண்டவனுக்காக சாப்புடாம இருக்க... " என்று தட்டில் சாப்பாட்டை போட்டு எடுத்து வந்து ஊட்டிவிட்டான்

ரகு :"நல்லா சாப்புட்டு தூங்குனா தானே நாளைக்கு seminar ல attentive ஹ இருக்க முடியும்... அப்ப தான் campus ல job கிடைக்கும்... "

சாந்தி :"என்னது வேலையா.. அதுலாம் வேணாம்.. இவளுக்கு கல்யாணம் பண்ணனும்... "

ரகு :"அதுலாம் முடியாது.. என் தங்கச்சி க்கு எப்ப கல்யாணம் பண்ணனும் னு எனக்கு தெரியும்... "

முத்து :'நல்லா தெரியுமே... "

சாந்தி :"நீ தான் செல்லம் குடுத்து அவளை கெடுத்து வச்சி இருக்க... "

ரகு :"என் தங்கச்சி க்கு இந்த உலகத்துல best மாப்பிளை கூட்டிட்டு வருவேன்.. இப்ப இவ சொன்னாலே அந்த பொறுக்கி மாதிரி எல்லாம் இல்லாம... என் தங்கச்சி ய கைல தாங்குற மாதிரி ஒரு மாப்பிளை.. " என்றான்

சாந்தி :'சரி தான்... "

கயல் அவள் அண்ணனை கட்டிக்கொண்டாள்...

To be continue...

******


👩‍❤‍👩👩‍❤‍👩👩‍❤‍👩

Post a Comment

Previous Post Next Post