காதல்
தோல்வியா அழு...
வாய் விட்டு,
சத்தம் போட்டு அழு,
கதறிக் கதறி அழு...
உன்
கண்ணீரோடு
உன் காதலும்
கரைந்து போகும்வரை
அழு...
பின்பு உலகத்தைப்
பார்...
காதலையும் மீறி
எத்தனையோ
அழகுகள், உணர்வுகள்
உனக்காய்
காத்திருக்கிறது..
காதல் தோல்வியையும்
தாண்டி
எத்தனையோ
பிரச்சனைகள்,
போராட்டங்கள்,
அழகுகளை ரசிக்கக்
கற்றுக்கொள்...
பிரச்சினைகளை தீர்க்க
பழகிக்கொள்..
போராட்டத்தில் ஓட
தெரிந்து கொள்..
வாழ்வதற்கே
வாழ்க்கையென்பதை
புரிந்துகொள்...
வாழ்வின் குறுகிய
முன்னேற்றத்தை
மனதில் கொள்...
பெற்றவள் இறந்தாலே
கண்ணீர்தான்
சிந்துகிறாய்...
காதல்
இறந்ததற்காக
உயிரைச் சிந்தத்
துணிகிறாய்..
காதல்
புனிதமானது தான்
இல்லை என்று
சொல்லவில்லை
ஆனால்
புனிதமான எதுவும்
உயிரை விலையாய்
கேட்பதில்லை.
விலங்குகளை பலி
கொடுத்து
கடவுளின்
புனிதத்தை
கெடுக்கிறோம்..
நம்மையே
பலிகொடுத்து
காதலின்
புனிதத்தை
கெடுக்கிறோம்..
நண்பா..
காதல் தோல்வியா..?
காதலி
உன்னை
வெறுத்திருந்தால்
நீ தேடிச் சென்ற
காதலை மறந்து
உன்னை தேடிவரும்
காதலை
அணைத்துக் கொள்..
நீ காதலையே
வெறுத்திருந்தால்
களவைப் போல்
காதலையும்
கற்று மறந்தாய் என
நினைத்துக்கொள்..
வாழ்க்கை என்பது
வாழ்வதற்கே
என்பதைப்
புரிந்துகொள்
வாழ கற்றுக் கொள்....
-------
காதலில் தோற்ற
ஒவ்வொரு ஆணும்
ஒரு கர்ப்ப வேதனையையும்
இறக்க முடியா சிலுவையையும்
சுமக்கிறார்கள்....
தோல்வியா அழு...
வாய் விட்டு,
சத்தம் போட்டு அழு,
கதறிக் கதறி அழு...
உன்
கண்ணீரோடு
உன் காதலும்
கரைந்து போகும்வரை
அழு...
பின்பு உலகத்தைப்
பார்...
காதலையும் மீறி
எத்தனையோ
அழகுகள், உணர்வுகள்
உனக்காய்
காத்திருக்கிறது..
காதல் தோல்வியையும்
தாண்டி
எத்தனையோ
பிரச்சனைகள்,
போராட்டங்கள்,
அழகுகளை ரசிக்கக்
கற்றுக்கொள்...
பிரச்சினைகளை தீர்க்க
பழகிக்கொள்..
போராட்டத்தில் ஓட
தெரிந்து கொள்..
வாழ்வதற்கே
வாழ்க்கையென்பதை
புரிந்துகொள்...
வாழ்வின் குறுகிய
முன்னேற்றத்தை
மனதில் கொள்...
பெற்றவள் இறந்தாலே
கண்ணீர்தான்
சிந்துகிறாய்...
காதல்
இறந்ததற்காக
உயிரைச் சிந்தத்
துணிகிறாய்..
காதல்
புனிதமானது தான்
இல்லை என்று
சொல்லவில்லை
ஆனால்
புனிதமான எதுவும்
உயிரை விலையாய்
கேட்பதில்லை.
விலங்குகளை பலி
கொடுத்து
கடவுளின்
புனிதத்தை
கெடுக்கிறோம்..
நம்மையே
பலிகொடுத்து
காதலின்
புனிதத்தை
கெடுக்கிறோம்..
நண்பா..
காதல் தோல்வியா..?
காதலி
உன்னை
வெறுத்திருந்தால்
நீ தேடிச் சென்ற
காதலை மறந்து
உன்னை தேடிவரும்
காதலை
அணைத்துக் கொள்..
நீ காதலையே
வெறுத்திருந்தால்
களவைப் போல்
காதலையும்
கற்று மறந்தாய் என
நினைத்துக்கொள்..
வாழ்க்கை என்பது
வாழ்வதற்கே
என்பதைப்
புரிந்துகொள்
வாழ கற்றுக் கொள்....
-------
காதலில் தோற்ற
ஒவ்வொரு ஆணும்
ஒரு கர்ப்ப வேதனையையும்
இறக்க முடியா சிலுவையையும்
சுமக்கிறார்கள்....
