உலக புவி தினம் தொடர்பான சில தேடல்கள் | Some Quest related to World Earth Day | KAVITHAI ULAGGAM | கவிதை உலகம்

    இன்று உலக பூமி தினம்!

***********************************


🔒பொது🌹அறிவு🔑

♦️உலக புவி தினம் ஒவ்வொரு ஆண்டும் எத்தனையாம் திகதி கொண்டாடப்படுகிறது?

✅ ஏப்ரல்- 22.


🔒பொது🌹அறிவு🔑

♦️இந்த ஆண்டு எத்தனையாவது புவி தினம் கொண்டாடப்படுகிறன்து?

✅ 50 வது.


🔒பொது🌹அறிவு🔑

♦உலக புவி தினத்தினை அனுஷ்டிப்பது தொடர்பிலான வித்தினை, 1969 இல் யுனெஸ்கோ மாநாட்டில் முன்மொழிந்தவர் யார்?

_✅ ஜோன் மெக்கனல்.



பொது🌹அறிவு🔑

♦️உலக புவி தினம் எத்தனையாம் ஆண்டு முதல் கொண்டாடப்படுகிறது?

✅ 1970 ம் ஆண்டு முதல்.


🔒பொது🌹அறிவு🔑

"உலக புவி தினம்-2020" தொனிப்பொருள் (Theme) யாது?

_✅ காலநிலை நடவடிக்கை (Climate Action)._




சுற்றுச் சூழல் தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, பூமியை பாதுகாக்கும் விதமாக ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதியாகிய இன்று உலக பூமி தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது


உலகில் 900 கோடி மனிதருக்கும், கணக்கிட முடியாது ஜீவராசிகளுக்கும் உணவு, உறைவிடத்தை அளித்து பேணிக் காத்து வருகிறது பூமி. அதைப் பற்றியும், அதை பாதுகாப்பது தொடர்பாக சிந்திப்பதற்கும் நமக்கு ஒரு நாள் அவசியம் தேவை. சூரிய குடும்பத்தில் மொத்தம் 8 கோள்கள் உள்ளன. இவற்றில் எந்த கோளுக்கும் இல்லாத சிறப்பாக, பூமிக்கு மட்டும்தான், உயிர்கள் வாழக்கூடிய சாத்தியக் கூறுகள் இருக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் புவி தினம் ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி ஒவ்வொரு நோக்கத்தின் அடிப்படையில் கடைப்பிடிக்கப்படுகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்பது இதன் பிரதான நோக்கம்.

கடந்த 1970 ஆம் ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் 192 நாடுகளில் கொண்டாடப்படுவது இதன் சிறப்பு அம்சம். கடந்த ஆண்டு ‘பசுமை நகரங்கள்’ என்ற நோக்கத்தில் கடைப்பிடிக்கப்பட்ட புவி தினம், இந்த ஆண்டு ‘அற்புதமான தண்ணீர் உலகம்’ என்ற நோக்கத்தில் கொண்டாடப்படுகிறது.

இந்த பூமி சுமார் 80 சதவீதம் கடலால் சூழப்பட்டு உள்ளது. பூமிக்குள் இருக்கும் மொத்த தண்ணீரின் அளவு சுமார் 1.39 கோடி கியூபிக் கி.மீ. இதில், நல்ல தண்ணீர், நிலத்தடி நீர் மற்றும் ஏரிகள், குளங்கள் போன்றவற்றில் நிரம்பும் தண்ணீர் அளவு சுமார் 1.07 லட்சம் கியூபிக் கி.மீ. ஆனால், பூமியில் இருக்கும் தண்ணீரில் ஒவ்வொரு நாளும் சுமார் 1,200 கியூபிக் கி.மீ. அளவு ஆவியாகிறது. இதற்கு காரணம் பூமியின் மேற்பரப்பில் உள்ள பசுமை காடுகள் அழிக்கப்படுவதாலும் பூமி வெப்பமாவதாலும்தான். பசுமையை பாதுகாப்பதும் பூமி வெப்பயமாதலைத் தடுப்பதும்தான் நம் முன் உள்ள முக்கிய பணியாக ஒவ்வொருவரும் உறுதிமொழி ஏற்போம். மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்.

BY NADHA BANU
        SUHATH
        SHARAFA



KAVITHAI ULAGGAM

Post a Comment

Previous Post Next Post