மன அழுத்தத்தை தியானம் மூலம் குறைக்கலாமா ?? எப்படி செய்வது?? Stress

#மன அழுத்தம் #தியானம் #Stress #கவலையின் உச்சம் #சோகம்

மன அழுத்தத்திற்கு பின்னால் இருக்கும் அறிவியலும் அதற்கு நம் மூளை எப்படி செயல்படுகிறது என்பதையும் பார்ப்போம்.

கவலை மற்றும் சோகம் இவை இரண்டும் தான் மனஅழுத்தத்திற்கான முக்கிய காரணிகள் ஆகும். தியானம் நிலையான கவனம் செலுத்துவதிலும் நீங்கள் கவலையுடனோ சோகமாக இருக்கும் போதோ மறுபடியும் அந்த நிலையான கவனத்தை அடைய உங்கள் மூளைக்கு பயிற்சி அளிக்கிறது.


*தியானத்தால் மூளையின் சிறு சிறு பகுதிகளை நம்மால் கட்டுப்படுத்த இயலும்*  சான்றாக, மூளையின் medial prefrontal cortex பகுதி நாம் மனஅழுத்ததில் இருக்கும் போது மிக தீவிரமாக செயல்படும். கவலையின் போது உங்களை பற்றி சிந்திக்க வைப்பது, உங்கள் எதிர்காலத்தை நினைத்து கவலை கொள்வது மற்றும் உங்கள் கடந்தகால நினைவுகளை நினைத்து கவலை கொள்வது என உங்களை பற்றி சிந்திக்க வைக்கும். நீங்கள் வாழ்க்கையை நினைத்து மிகவும் கவலை படுகையில் இது கட்டுப்பாடு மீறி செயல்படுகிறது.

நீங்கள் பயப்படும் போது உங்கள் மூலையில் amygdala பகுதி செயல்படுகிறது. நீங்கள் பயப்படும்போதோ பதற்றப்படும்போதோ இந்த பகுதி செயல்வேகமெடுக்க தொடங்கும். இது தான் அட்ரீனலின் சுரக்க செய்ய அட்ரீனல் சுரப்பிகளுக்கு கட்டளை இடுகிறது. நீங்கள் பயப்படும்போது உங்கள் உடலில் cortisol அளவுகள் அதிகரிக்கின்றன.

*நீங்கள் நன்கு தியானம் செய்யும் போது இந்த இரண்டு பகுதிகளுக்கும் இருக்கும் தொடர்பை துண்டித்து மனஅழுத்தத்தை எதிர்க்க இயலும் என்று ஹார்வர்ட் பல்கலைக்கழக ஆய்வு சொல்கிறது.* நீங்கள் எந்த அளவு தியானத்தை நேர்த்தியுடனும் நம்பிக்கையுடனும் செய்கிறீர்களோ அந்த அளவு உங்களால் *கவலை* மற்றும் *அழுத்தம்* ஏற்படுத்தும் எதிர்மறையான உணர்வலைகளை கட்டுப்படுத்த இயலும். நீங்கள் செய்யவேண்டியவை *தீவிர நம்பிக்கை கலந்த ஆழ்ந்த தியானம்.*

நீங்கள் செய்யும் தியானம் மூளையிலுள்ள Hippocampus பகுதியை பாதுகாக்கும். மனஅழுத்தம் கொள்வதனால் இந்த ஹிப்போகாம்பஸ் சுருங்கிப்போகிறது.

நீங்கள் ஒரு நாளைக்கு *30 நிமிடங்கள்* தியானம் செய்வதால் இந்த ஹிப்போகேம்பஸ் பாதுகாக்கப்படுகிறது. இதனால் மறதி, பயம் போன்றவற்றை தவிர்க்க இயலும்.

மேற்கண்ட பரிசோதனைகள் சொல்வது ஒன்றே ஒன்று தான். *எல்லாவற்றிற்கும் உங்கள் மனம் தான் காரணம்.* கடவுளை நினைத்து மனதை ஒருநிலை படுத்தி நன்றாக தியானம் செய்யுங்கள். இருக்கிற ஒன்றை இல்லை என்று நம்பும் எண்ணமே போதும். உங்களை கவலைகொள்ள செய்யும் விஷயத்தை மறந்துவிடுங்கள்.

*Piriyan*
Human Engineer❤

Post a Comment

Previous Post Next Post