*❤EVERY LOVE STORY IS BEAUTIFUL❤️*
*super short story*
*super short story*
*Here is my first story*
*Hope you like it*
*Hope you like it*
*The Unforgettable Events*
*Of a Event* *Manager*
*Of a Event* *Manager*
*(Part -1)*
ஒரு பரபரப்பான சூழ்நிலையில் வினோ phone பேசிக்கொண்டு இருக்க நடக்கிறது ஒரு event நிதானமாக நடத்தி வருகிறார் இரவு 2மணிக்கு.
4 மணிக்கு வீட்டுக்கு வரும் வினோ 4:15க்கு வைத்திருக்கும் அலாரத்தை முன்கூட்டியே அனைத்து உறங்குகிறார்.
காலை 7மணிக்கு 7:15 க்கு அடிக்கும் அலாரத்தை அனைத்து விட்டு மீண்டும் தூங்க அம்மா திட்டி, பின்னர் அடிவாங்கி அதை பொருட்படுத்தாமல் நிதானமாக எழுகின்றாள் தீபா.
தீபா: ஏம்மா காலையிலே அடிக்கற? நான்தான் அலாரம் அடிச்சா எழுவேன் ல.
தீபாவின் அம்மா: அலாரம் அடிச்சா எங்க எழற, நான் அடிச்சா தான எழற.
மெதுவாக புறப்பட்டு 8:30pmக்கு மதிய உணவுக்கு அம்மாவிடம் தோசை கேட்க, அவளுடைய அண்ணனுக்கு துணிகளை தேய்த்து கொண்டிருக்கும்
தீபாவின் அம்மா: ஒரு வேளை செய்யரது இல்லை தோசை வேண்டுமாம், போய் சுட்டு எடுத்துட்டு போ
என்று திட்ட, அவளும் சமையலறையில் நுழைந்து அவ்வாறே செய்தாள்.
அனைவரிடமும் பாய் சொல்லி கிளம்ப
அனைவரிடமும் பாய் சொல்லி கிளம்ப
தீபாவின் அம்மா: எத்தனை சுட்ட?
தீபா:2 தோசை.
தீபாவின் அம்மா: இன்னும் 2 சுட்டுட்டு போ.
தீபா: உன் ஆசை.
வீட்டிலிருந்து வெளியேறி தனது தோழிக்கு phone செய்து பேச அவள் தனது observation and record noteஐ மறக்காமல் எடுத்து வர சொல்ல, சரி என்று cut செய்து கொண்டாள்.
தொடரும்
தொடரும்
*(Part -2)*
9மணிக்கு சக தோழிகளுடன் கல்லூரி பேருந்துக்காக காத்திருக்க 9:15க்கு வந்த பேருந்தில் ஏறினாள்.
9:45க்கு கல்லூரியில் இறங்கி கேன்டீன் சென்றுவிட்டு பின் தன்னுடைய 2nd B.Sc Maths வகுப்பிற்கு சென்றாள்.
தீபா : ரம்யா வரவில்லையா? என ஆனந்தமாக கேட்க.
ப்ரியா : ஏன்? அவளுக்காக ஏதாவது எடுத்துட்டு வந்திருக்கியா?
தீபா : சொல்லப்போனா எதுவும் எடுத்துட்டு வரல.
என சிரித்துக்கொண்டே சொல்லும்போதே
ரம்யா : என்ன இல்லியா? காலையில நீ observation note எழுதிட்டனா எடுத்துட்டுவானு சொன்னதற்கு சரின்னு சொன்ன?.
தீபா : நான்தான் இன்னும் எழுதவே இல்லையே.
ப்ரியா : அப்போ இன்னைக்கு ரெண்டு பேரும் சேர்ந்து வெளியே தான் நிக்கபோரிங்க?
தீபா : மதியம்தான, சாப்பிட்டு விட்டு தெம்பாக நிக்கலாம்.
ரம்யா : சாப்டறதிலையே இரு.
தீபா : 😏
First hour la தன்னுடைய rough noteஐ பென்சில் எடுத்துட்டு அமர்ந்தாள் தீபா.
8 மணிக்கு எழுந்த வினோ புறப்பட்டு தன்னுடைய officeக்கு கிளம்ப அதற்கான ஏற்பாடுகளையும் செய்து விட்டு இறுதியாக அன்றைய நாளின் prepration செய்துகொண்டிருந்தான்.
வினோ அம்மா : சாப்பிட்ட பிறகு preparation பன்னுபா
வினோ : இதோ முடிஞ்சுது என சொன்னான்.
பின்னர் சாப்பிட்டு 10:15க்கு கிளம்பினான வினோ.
3rd hourல் பாடம் எடுக்கப்படும் போது
ரம்யா : classஅ கவணிக்காம என்னடி எப்பவும் போல கிருக்கிக்கிட்டு இருக்க கிருக்கி.
தீபா : எது நான் வரையறத பார்த்தா கிருக்கறமாதிரியா இருக்கு?
ரம்யா : நாம இருக்கிறது maths class இத ஒழுங்கா படிக்காம 4 அரியர் வச்சிக்கிட்டு இப்பதான் designing பன்றாளாம். இன்னும் சில நிமிசத்தில lunch break அடிச்சிடும்
என பேசும் போதே
தீபா : நீ என்ன சாப்பாடு எடுத்து வந்த?
ரம்யா : இன்னும் சில நிமிசத்தில lunch break அடிச்சிடும் , அடுத்த hour வெளியே நிக்கனும்னு சொல்ல வந்தேன்.
தீபா : 😏
தொடரும்
*❤EVERY LOVE STORY IS BEAUTIFUL❤️*
*super short storys*
·٠•●🎊♥ ~*தனிமையின் தோழன்.*~ ♥🎉●•٠·˙
*The Unforgettable Events*
*Of a Event*
*Manager*
*(Part -3)*
Lunch hourல தீபாவின் அண்ணன் lunch boxஅ திறக்கும்போது அதில் 5க்கு பதிலா ஒரேயொரு தோசை தான் இருக்கிறது.
அவர் யோசிக்கும்போது தீபா தோசை சுட்டு எடுத்துட்டு போனது அடுப்பில் இல்லை தன்னுடைய lunch boxலனு புரிஞ்சுக்கராரு.
அவர் mind voice
சதீஷ் : அவலாட்சம் 2 தோசையோட போன, ஆனா அம்மா நீ அவகிட்ட இன்னும் 2 சூட்டுட்டு போனு சொன்னது வேர லெவல், அதுக்கும் அவ உன் ஆசைமா னு சொல்லும் போதே நான் சுதாரிச்சிருக்கனும்
னு தன் செல்ல தங்கையை நினைத்து சிரிச்சிட்டே கடையில் போய் சாப்பிடுகிறார்.
இது நடக்கும் போதே தீபா தன் தோழிகளுடன் ஜாலியாக சாப்பிடுகிறாள்.
பின்னர் 4 hourல
அனிதா மேம் : observation எழுதாதவங்க எந்திருங்க
தீபாவும் அவள் தோழி ரம்யா வும் எழ
அனிதா மேம் : ஏய் ரம்யா நீயுமா, இவகூட சேராத னு சொன்னத கேக்கல அதான் நிக்கற, போய் principalஅ பார்த்து விட்டு வரலாம்
ரெண்டு பேரும் சேர்ந்து principalஅ பார்க்கும் போது
Principal : ஏற்கனவே பல அரியர் அப்பவும் திருந்தமாட்ட
னு திட்டி
இனி என் ரூமுக்கு வரமாதிரி ஆச்சின்னா வருத்தப்படுவ, இதே last ஆ இருக்கட்டும் னு திட்ட,.
ரம்யா கண் கலங்கி வெளிவந்த பிறகு
தீபா : நீ அழ காரணமான அவங்க ரெண்டு பேரையும் சும்மா விட மாட்டேன்
என கூற
ரம்யா அடிப்பாவி என மனதிற்குள் நினைத்து கொண்டு அமைதியாக சென்றாள்.
தீபா மீண்டும் தனது rough noteல் வரைய , ரம்யா திரும்பவும் கிருக்கி கிருக்க ஆரம்பிச்சிட்டா என மனதில் நினைத்துக் கொண்டு classஅ கவணிக்க ஆரம்பித்தாள்.
தனது மொபைல் அடிக்க அதை எடுத்த
வினோ : சொல்லுடா கவின்
கவின்: எங்கடா இருக்க
வினோ : ஹோட்டல சாப்பிட்டு
கவின்: ஈவ்னிங் கால் பன்னு ஒரு வேலை இருக்கு
வினோ : ok டா
ஈவ்னிங் போன் அடிக்க அதை எடுக்கும்
தீபாவின் அம்மா : சொல்லு சதீஷ்
சதீஷ் : அம்மா நான் வர லேட் ஆகும் தீபா வந்துட்டாளா?
தீபாவின் அம்மா : வந்து வழக்கம் போல வேலை ஏதும் செய்யாமல் சும்மா தான் உக்கார்ந்து இருக்கா, எப்போ வருவ?
சதீஷ் : 9மணி ஆகும்
தீபாவின் அம்மா : மதியம் தோசை நல்லா இருந்திச்சா
சதீஷ் : (எங்க இருந்துச்சு னு நினைச்சு சிரிச்சிட்டே) ம் சூப்பர் ஆ இருந்தது.
தீபாவின் அம்மா : சரிடா அப்புரம் கால் பன்னு
தீபா : அவன் லேட் ஆ வருவான்னா பிரியாணி வாங்கிட்டு வர சொல்லேன்
தீபாவின் அம்மா : நீ பன்ற வேலைக்கு பிரியாணி வேற ஒழுங்கா அந்த 4 அரியர clear பன்னு
தீபா : நான் 12thல 950 மார்க் எடுத்தேன் எனக்கு புடிச்ச மாதிரி degreeஅ சேர்த்து விட்டு இருந்தால் அரியரே வச்சிருக்க மாட்டேன்.
சண்டை அதிகரிக்க தன் designing and drawing கனவை நினைத்து அழ ஆரம்பித்தாள் தீபா.
தொடரும்
*❤EVERY LOVE STORY IS BEAUTIFUL❤️*
*super short storys*
·٠•●🎊♥ ~*தனிமையின் தோழன்.*~ ♥🎉●•٠·˙
*The Unforgettable Event Of a Event*
*Manager*
*(Part -4)*
ஈவ்னிங் கவின் க்கு call பன்னும்
வினோ : சொல்லுடா என்ன விசயம்?
கவின் : எங்க காலேஜ் ரோட்டில் இருக்க ஒரு restaurant renovated and reopen பன்றாங்க அவங்க அந்த reopenஅ grand ஆ பன்னனுமாம், நான் உன்னை பற்றி சொன்னேன் அவங்க உன்ன வந்து பார்க்க சொன்னாங்க.
வினோ : எப்போ function?
கவின் : 4 days ல.
வினோ : சரி நான் இப்போ வரும்போது போய் பார்க்கிறேன்.
கவின் : சரிடா.
8:30க்கு அம்மாவிற்கு call பன்னும்
சதீஷ் : நான் வந்து விடுவேன் . தீபா என்ன பன்றா?
தீபாவின் அம்மா : அவ ரூம்ல இருப்பா அழுதுகிட்டு.
சதீஷ் : ஏம்மா? என்னாச்சு?
தீபாவின் அம்மா : பின்ன வீட்ல ஒரு வேலையும் செய்யறதில்ல, ஒழுங்கா படிக்கறதும் இல்ல, உன்கிட்ட பிரியாணி வாங்கிட்டு வர சொல்லுங்கறா. அதான் கோபத்துல திட்டிட்டேன்.
சதீஷ் : சரிமா நான் கிளம்பிட்டேன் வந்துடரேன்.
கவின் சொன்ன restaurantக்கு சென்ற
வினோ : Hello sir, நான் வினோ Event Manager, என் நண்பன் கவின் நீங்க என்ன வந்து உங்கள பார்க்க சொன்னத சொன்னான்.
Restaurant owner : வணக்கம் பா. உக்காருங்க, ஜூஸ் சாப்பிடரிங்களா, இங்க ரெண்டு ஜுஸ் கொண்டாங்கபா.
ஜுஸ் சாப்பிட்டு கொண்டே பிசினஸ் பேச்சு தொடர்கிறது.
Restaurant owner : இன்னும் 4 நாள் தான் இருக்கு தம்பி அதுக்குள்ள சீக்கிரமா நல்ல grandஆ ஏற்பாடு பன்னுங்க
Details கேட்டுகிட்ட
வினோ : கண்டிப்பாக grand reopening பன்னிடலாம் சார்
Restaurant owner : சரிப்பா நீ சொன்ன மாதிரியே நாளைக்கே வந்து reference எடுக்க ஆரம்பி, காலையிலேயே வா நான் இருப்பேன்.
வினோ : சரி சார் நான் நாளைக்கு காலையில வந்து பார்க்கிறேன். வரேன் சார்.
Restaurant owner : சரிப்பா.
வீட்டிற்கு வந்த சதீஷ் ஐ பார்த்து
தீபாவின் அம்மா : வாப்பா, சாப்பாடு எடுத்து வைக்கிறேன் கை கழுவிட்டு வா
சதீஷ் : தீபா எங்க?
தீபாவின் அம்மா : இன்னும் ரூமவிட்டு வரல.
சதீஷ் : இருமா வரேன்.
தீபா ரூமுக்கு சென்று
சதீஷ் : என்னாச்சு உனக்கு?
தீபா : ஒன்னும் இல்லை (அழுதிட்டே)
சதீஷ் : சரி அழாத
தீபா : எப்ப பார்த்தாலும் எல்லாரும் என்னையே திட்டுனா நான் என்ன செய்ய?, யாருக்குமே என்ன புடிக்கல.
தீபாவின் அம்மா : சும்மா அழாத, நீ தான் ஒழுங்கா நடந்துக்கனும், இல்லனா திட்டாம கொஞ்சுவாங்கலா.
சதீஷ் : சரிம்மா நீ திட்டாத, நீ போ நான் வரேன்.
தீபாவின் அம்மா : சரி சீக்கிரம் வா சாப்பாடு எடுத்து வைக்கிறேன். நீயும் வாடி.
சதீஷ் : சரி எல்லாம் உனக்கு பிடிச்சமாதிரி நடக்கும், ஆனா நீ அந்த அரியர கிளியர் பன்னு நல்ல percentage வாங்கு அதுக்கப்புறம் ஏதாவது யோசிக்கலாம்.
அண்ணனின் பாசத்தை புரிந்து கொண்டு புண்ணகை யுடன்
தீபா : சரிண்ணா நான் fresh ஆகிட்டு வரேன் நீ போ.
என கூற தான் வாங்கி வந்த பிரியாணியை தீபாவிடம் கொடுத்து
சதீஷ் : இந்தா நீ கேட்ட பிரியாணி சாப்பிட்டு நல்லா தூங்கு
தீபா : thanksணா
சாப்பிட்டு விட்டு உறங்கினாள்.
தொடரும்
*👇👇👇group link touch👇👇👇*
