மறுமணம் எனும் தலைபில் உள்ள தொடர் கதை. Episode 1 to 4

#மறுமணம்....


அது பெப்ரவரி மாதம். கடும் குளிர். குவைத் விமான நிலையத்தில் ஒரு உருவம் ஹபாயா அணிந்து சோலை ரெப் செய்து குறுக்கு வாக்கில் ஒரு ஹேன் பேக் உடலோடு போர்த்திய ஒரு ஜாக்கெட் கையில் பாஸ்போட் மற்றும் டிகட் அவற்றை இருக பற்றிய படி இருக்கையில் அமர்ந்திருந்தது. பக்கதில் ஒரு டிராவல்லிங் பேக்.. தலையை குணிந்த படி மூலை எங்கோ சிந்தனையில் லயித்திருக்க அசையாமல் இருந்தது அவ்வுருவம். அவள் வேறு யாருமல்ல எம் கதையின் கதாநாயகி ஸாரா...



வட்ட சிறிய முகம்...புன்னகைக்கும் இரு விழிகள். வில்லாய் வலைந்த புருவம் அடிக்கடி வாயினுள் சென்று ஈரபடுத்தி வெளிவரும் இதழ்கள். அழகியா பேரழகியா என்பதை வாசகர்கள் நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

இரவு பத்து மணி விமானத்திற்காக காத்திருக்கும் அறையில் ஆழ்ந்த சிந்தனையில் படபடக்கும் இதயத்தை கட்டு படுத்த போராடிக்கொண்டிருந்தாள் ஸாரா. இமைக்குள் எட்டி பார்க்கும் கண்ணீரை இரக்கமே இன்றி கண்களிலிருந்து வலிந்து விடாமல் இருக்க அவள் செய்யும் பிரயதனம் அபாரமானது அடிக்கடி வெளியில் வெறித்து பார்த்து கண்ணாடியின் ஊடே வெளியே தெரியும் வானத்தை வெறுமையாய் வெறித்து தன்னை ஆறுதல் படுத்த முயன்றாள்.




தன் வாழ்க்கையில் மட்டும் அடுத்த நொடி கூட நிச்சயமற்ற அதிர்ச்சிகளை தருவது அவளுக்கொன்றும் புதிதல்ல. ஆனால் அவ்வதிர்ச்சிகள் சில சமயம் ஆனந்தமாகவும் பல சமயம் சுனாமி பேரலையாகவும் மாறி அவளை தடுமாற வைத்து விடுகிறது.இன்றும் அப்படிதான் அவள் வாழ்வில் நொடிக்கொரு பேரதிர்ச்சி காத்திருந்தது..

தொடரும்....
Wriitten by zamriya jezza


#மறுமணம்...02.


விமானம் வந்து விட்டதை உணர்த்த பக்கதில் இருந்தி சகோதரி அவளை தட்டி விட சுயநினைவை அடைந்தாள் ஸாரா...

வாழ்க்கை எவ்வளவு சுவாரஷ்யமானது தெரியுமா? எதை நாம் வெறுக்கிறோமோ அதையே நம்மில் திணிக்கும் எதை நாம் விரும்புகிறோமோ அதை தூரமாக்கி வேடிக்கை காட்டும் ஆனால் கிடைத்ததை கொண்டு வாழ தெரிந்தவன் நிம்மதியடைகிறான். ஆசை கொண்டதை அடைய நினைப்பவன் அழிவில் முடிகிறான்.




கவுண்டர் செக்கின் முடிய ஸாரா விமானத்தை நோக்கி விரைந்தாள். அவளது இருக்கையை தேடி அமர்ந்துக் கொண்டாள்..
மீண்டும் கண்களில் கண்ணீர் எட்டி பார்த்து சிரம பட்டு தேக்கிக் கொண்டாள்..

அவ்வதிர்ச்சி அவளை ஒரு கணம் உலுக்கி போட்டிருந்தது. அன்றை தினம் நடந்த சம்பவத்தை மீட்டி பார்க்கிறாள்..

ஸாரா வீட்டு வேலையில் மூழ்கி கிடந்தாள். Imo வில் கோல் ரிங்ஸ் அடித்துக் கொண்டே இருந்தது சைலன்ட் மூட்டில் இருந்ததால் அவளுக்கு கேட்க வில்லை வேலைகளை முடித்து விட்டு போஃனை கையில் எடுக்கிறாள்.



20 மிஸ்ட் கோல்கள் என நொடிபிகேஷன் காட்டியது அத்தனையும் வீட்டிலிருந்த மேற் கொள்ள பட்ட அழைப்புகள். ஸாரா அவசரமாக அழைப்பை மேற் கொள்கிறாள்..

என்னடி எத்தன கோல் எடுக்கிறது.. தூக்க மாட்டியா? நாநாவின் அதட்டல் குரல்..

இல்ல நாநா வேலயா இருந்தேன்... என்ன விஷயம் என்றாள் சாந்தமாக..
உம்மாவுக்கு சீரியஸ் நெஞ்சி வலியால துடிச்சி போயிட்டாங்க ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி இருக்கம் இனியும் உம்மாவால உன் பிள்ளைகள பார்க்க முடியாது. உடனே வர்ர வலிய பாரு என்றார்..

தலையில் பாராங்கல்லே விழுந்ததை போன்ற உணர்வு அழுகை முட்டிக்கொண்டு நின்றது



ம்ம் இன்ஷா அல்லாஹ்.. இந்த வார்த்தையோடு அழைப்பை துண்டித்தாள். அப்படியே கிட்ச்சன் தரையில் அமர்ந்தாள் குமுறி குமுறி அழுதாள். இறைவா.. என் தாயை காபாற்று அவரும் இல்லை என்றால் என் வாழ்வு பிடிமானம் அற்று போய் விடும்... கதறிய அவள் விழிகளுக்கு அப்போது இறைவனை தவிர சிறந்த ஆறுதல் எதுவாக இருக்க முடியும்..

விழிகளை துடைத்துக் கொண்டு எழுந்தாள் வந்து ஒரு வருடம் கடந்து இன்னும் ஒரு வருட ஒப்பந்தம் இருக்கும் நிலையில் நாட்டுக்கு அனுப்ப சொல்லி கேட்பது எந்த வகையில் சாத்தியமாகும் என்பதை அவளால் முடிவு செய்ய முடியவில்லை. தயங்கி தயங்கி தன் மேடமின் அறை கதவை தட்டுகிறாள் கண்ணீர் அவளையும் மீறி கன்னங்களில் வலிந்தது.

கதவை திறந்த மேடம் அதிர்ந்தாள்.. ஸாராவை ஒரு முறையேனும் அப்படி கண்ணீர் சிந்தி அவள் கண்டதில்லை. எப்போதுமே இயல்பான புன்னகையோடு பொறுமையோடு வேலை செய்யும் இவளுக்கு என்ன நடந்தது என்ற ஆச்சரியமாக கூட இருக்லாம்..

என்ன.? என்றாள்..

மேடம் என் உம்மாவுக்கு சீரியஸ் கோல் வந்தது எனக்கு ஸ்ரீ லங்கா போகனும்..என்றாள் தேம்பிய படியே ஸாரா

தொடரும்.



#மறுமணம்... 3


மேடம் ஆச்சரியமாக அவளை பார்த்தாள் அவளுக்கே என்ன பதில் சொல்வது என்பது சங்கடமானது போலும்

இரு பொஸ் வரட்டும் கேட்டு சொல்றேன் என்று விட்டு உள்ளே போய் விட்டாள். இறைவனிடம் புலம்பிய படியே வேலைகளை செய்தாள் ஸாரா.. பகலுணவுக்காக பொஸ் வர எல்லாவற்றை எடுத்து வைத்து விட்டு இறைவனை பிராதித்த படி கிச்சனில் நின்றிருந்தாள் ஸாரா..



ஸாரா.....

ஸாரா.... மேடமின் குரல் கேட்டு வேகமாக சாப்பாட்டறைக்கு வந்தாள்..

இன்னும் உன் கான்ட்ரெக் முடியல்லயே எப்படி அனுப்புறது பொஸ் சொல்ல ஸாராவின் கண்களிலிருந்து பொல பொல வென கண்ணீர் கொட்டியது.. அவளால் பேச முடியவில்லை தெரிந்த அறபில் எனக்கு நாட்டுக்கு போக வேண்டும் என்றாள்..

அவன் யோசித்தான் பின் உன் உம்மா ஹாஸ்பிடல்ல தானே இருக்காங்க வீடியோ கோல் எடுத்து அவங்கள காட்ட சொல்லு அனுப்புறன் என்றான்..

நேரத்தை பார்த்தால் ஸாரா மணி 2.00 அப்படியானால் நாட்டில் 4.30 மணி சில சமயம் நாநா உம்மாவிடம் இருக்க கூடும் அவசரமாக வீடியோ கோல் செய்தாள்.. அவளின் விதி நாநா ஆன்ஸ்வர் செய்ய

நாநா உம்மாவ பார்க்க போனீங்களா..

ம்ம் ஹாஸ்பிடல்ல தான் இருக்கன்...

சரி உம்மா காட்டினா தான் டிக்கட் தாரனு சொல்லுறான் பொஸ் கொஞ்சம் உம்மாவ காட்டுங்களே
Icu உள்ள ஃபோன் பாவிக்க உட மாட்டான் தெரியாதா உனக்கு...

ப்ளீஸ் நாநா.. அப்பதான் எனக்கு வர ஏலும் நீங்க பேச தேவல்ல காட்டினா போதும்..



அவர் வேறு வழி இன்றி உள்ளே எடுத்து சென்று காட்ட பொஸ் பார்த்து விட்டு எதுவும் பேச வில்லை.
ஸாராவுக்கு தன் தாயை அந்த நிலையில் பார்த்த போது உயிரே போனது போல வலித்தது.
சரி நீ நாட்டுக்கு போகலாம் ஆனா இந்த மாச சம்பளம் தர மாட்டன் அதுல தான் டிக்கட் செஞ்சி அனுப்ப போறன் பரவா இல்ல தானே உன் 2 இயர் கான்ட்ரெக் இன்னும் முடியல்ல.. என்றான்

சரி பரவா இல்ல என்று விட்டு இறைவனுக்கு மனதினுள் நன்றி பகிர்ந்தவளாக கிட்சனுக்கு விரைந்தாள். மாலையில் டிக்கட் கன்போம் செய்து விட்டு வந்து இரவு 10 மணிக்கு ஃப்ளைட் நீ 7 மணிக்கு ரெடியா இரு டிரைவர் வருவான் உன்ன கூட்டி போக என்று விட்டு பொஸ் போய் விட்டான்.
போக போகிறாளே என்ற தயவு தாட்ச்சண்யம் எல்லாம் அங்கு இல்லை எது எப்படியோ உள்ள வேலை அத்தனையும் மொத்தமாய் வாங்கினாள் மேடம் போகும் அவசரத்தில் ஸாராவும் கஸ்டம் பாராது செய்து முடித்தாள்.. இப்போது நாட்டுக்கு போக டுபாய் விமானம் எயார் அராபியாவில் 24c இருக்கையில் அமர்ந்திருக்கிறாள்.

டச் ஃப்ளைட் டுபாய் போய் அங்கே வெயிட் செய்து நாட்டுக்கு போக வேண்டும் குறைந்தது ஒரு நாள் பிடிக்கும் கையில் பத்தே பத்து தினார் இலங்கையிலிருந்து வரும் போது எடுத்து வந்த 2000 ரூபாய் இதை தவிர பணம் ஏதுமில்லை..டச் ஃப்ளைட் என்பதால் தண்ணீர் 100ml கு மேல் எடுத்து செல்ல முடியாது. ஃப்ளைடினுள் காசு கொடுத்து தான் வாங்க வேண்டும். ஸாரா கருமை நிறைந்த இரவை பார்க்கிறாள். என் வாழ்வும் கருமைக்குள் புகுந்த இரவாகிடுமோ.. இதயம் விம்மியது.. விழியோரம் கசிந்த கண்ணீரை யாருமறியாமல் துடைத்துக் கொண்டாள். பக்கதில் ஒரு ஆண் பார்க்க ஏதோ ஒரு பெரிய பதவியில் இருப்பவரை போன்ற தோற்றம்.. ஸாராவுக்கு அதையெல்லாம் கண்டுக் கொள்ளும் மனநிலையில் இல்லை. அடிக்கொரு முறை இறைவனை பிராத்தித்த படி அமர்ந்திருந்தாள்.
பக்கதில் அமர்ந்திருந்தவன்.. ஸாராவை பார்த்து hi salam என்றான்..

ஸாரா திரும்பினாள். பதிலுக்கு வ அலைக்கும் ஸலாம் என்றாள்.
அமைதியாக சில நிமிடங்கள்..

தொடரும்...





*மறுமணம்... 4*


Hi i am srilanka where are you from என்றான்..

நானும் தான் என்றாள் தமிழில்..

ஓ.... தமிழா. என் நேம் மெஹ்தி.. நீங்க..

ஸாரா திரும்பி அவனை பார்த்துபுன்னகைத்தாள். I am saraah

அவள் அமைதியாகி விட்டாள்.. தூர தெரியும் வின் மீண்களும் கருமைக்குள் சிக்கி ஒளி விளக்கால் அழங்கரிக்கும் மாடி வீடுகளும் குவைட் நாட்டை விட்டு அவள் விடைபெறுவதற்க்கு இறுதி பிரியா விடை அளித்தது ஃப்ளைட் நகர ஆரம்பித்தது..



முன்னிருக்கையில் தலையை சாய்த்து கண்களை இறுக மூடிக்கொண்டாள்.மேலேறும் போது அவளை அறியாமலேயே பயத்தில் வயிறு கொலுவும் என்பதால் அப்படி செய்தாள்.

சமனிலை அடைந்ததும் தலையை எடுத்து சீட்டில் சாய்ந்து அமர்ந்தாள். கண்களில் கண்ணீர் வற்றி விட்டிருந்தது இயத்தை ஏதோ ஒரு பாரம் அழுத்திக் கொண்டிருந்தது. இமைகள் வலித்தது..

பக்கதில் அமர்ந்திருந்த மெஹ்திக்கு அவள் நிலை காண பரிதாபம் எழுந்தது..

Sister... என்றான்.

ம்ம் என்று அவனை பார்த்தாள் அழுதழுது வீங்கிய கண்கள் காய்ந்து போன உதடுகள் பசியின் தவிர்ப்பு அவள் கண்களில் தெரிந்தது.

உங்கட எக்ரிமெண்ட் முடிஞ்சா நாட்டுக்கு போறீங்க..
இல்ல..

ஏன்...

உம்மாவுக்கு சீரியஸ்..

இன்னாலில்லாஹ்... சரி குவைத் வந்து எத்தனை இயர்

1 இயர்...

நீங்க மெரீடா..

ம்ம்..

புள்ளகள் இருக்கா..

ம்ம்

எத்தன...

இரண்டு...கேர்ள்ஸ்

யாரு பார்த்துக் கொள்ளுற புள்ளைகள..

உம்மா....

வாப்பா எங்க..

மௌத்து

ஓ. கே ஹஸ்பெண்ட் என்ன பண்ணுறாரு..

Divorce..

What...
விவாகரத்தாகிட்டன்..

ஏன்...
அர்த்தமில்லாம சேர்ந்து வாழுறதுல அர்த்தமில்ல அதான்..

ம்ம்..



Sorry கேக்குறன் என்டு தவறா நினைக்க வாணம் உங்கட ஹஸ்பண்ட்ட ஏன் பிரிஞ்சீங்க..

அவள் சிரித்தாள். அந்த வேதனையிலும் அவள் சிரிப்பது ஆச்சரியம் தான்.
அவர் இப்ப என் hubby இல்ல so ஒரு அந்நிய ஆண பத்தி புறம் பேச நான் விரும்பல என்றாள்.

மெஹ்தி புன்னகைத்தான். Sorry

உம்மாவுக்கு முடியாம போனா புள்ளவள யாரு பாத்துக்குவா..

யாருமில்ல நான் தான் போய் பார்க்கனும்..

நெக்ஸ் வருமானத்துக்கு என்ன பண்ணுவீங்க.

தெரியா....

சொந்த வீடு இருக்கா

இல்ல..

இனி லைப்ப எப்படி மூவ் பண்ணுவீங்க...

தெரியா ஆனா அல்லாஹ் இருக்கிறான் அநாதைகளுக்கு அவன விட்டா யாரிருக்கா... அவளுக்குள் பொங்கி வந்த அழுகையை அடக்கினாள் ஆனால் குரல் தழுதழுத்தது..

ஸாரா அமைதி ஆனாள். அவள் வலியை மெஹ்தியால் உணர முடிந்தது.


சிறிது நேர அமைதிக்கு பின் ஏன் செகன்ட் மேரேஜ் பண்ணிக்கலாமே... இதை கேட்டதும் ஸாரா கண்களில் கண்ணீர் வருமளவுக்கு சிரித்தாள் . எல்லோரும் திரும்பி அவளையே பார்த்தார்கள். மெஹ்திக்கு தர்ம சங்கடம் ஆகியது.

தொடரும்

Post a Comment

Previous Post Next Post